நாம் அனைவரும் அடர்த்தியான, ரம்மியமான, முடியைப் பெற விரும்புகிறோம். ஆனால் அதிகரித்து வரும் மாசு, பல்வேறு ஸ்டைலிங் பொருட்கள், மன அழுத்தம், ஆரோக்கியமற்ற உணவு மற்றும் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களால் உடலில் வெப்பம் அதிகமாக உற்பத்தியாகிறது.
இதனால், நம்மில் பலர் முடி உதிர்தல், பொடுகு அல்லது பிற பிரச்னைகளை அனுபவிக்கிறோம். எனவே, உங்கள் தலைமுடி மெலிந்து போவதைப் பற்றி நீங்கள் கவலைப்பட்டு, இயற்கை வைத்தியம் மூலம் அதைக் கையாள விரும்பினால், ஜூஹி பர்மர் உங்களுக்காக ஒரு சரியான வீட்டில் தீர்வை பகிர்ந்துள்ளார்.
ஜூஹி பர்மரின் ஹேர் டானிக் செய்முறை:
தேவையான பொருட்கள்:
- 2 கப் தண்ணீர்
- 2 தேக்கரண்டி ரோஸ்மேரி இலைகள்
- 1 ஸ்பூன் வெந்தய விதைகள்
தயாரிப்பு:
- ரோஸ்மேரி இலைகள் மற்றும் வெந்தய விதைகளுடன் தண்ணீரை 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்
- அது ஆறியதும், வடிகட்டி, ஸ்ப்ரே பாட்டிலுக்கு மாற்றவும்
அதை எப்படி பயன்படுத்துவது:
- டானிக்கை உங்கள் முடியின் வேர்களில் படும்படி உபயோகிங்கள்
- மீதமுள்ள டானிக்கை குளிர்சாதன பெட்டியில் சேமித்து 4-5 நாட்களுக்குள் பயன்படுத்தவும்
சில ஆய்வுகளின்படி, ரோஸ்மேரி முடி வளர்ச்சியைத் தூண்டுவதில் பயன்படும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதேபோல், வெந்தய விதைகள் மிதமான முடி உதிர்தலுக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த குறிப்பிட்ட ஹேர் டானிக்கைப் பற்றி டாக்டர் வந்தா பஞ்சாபி, இந்தியன் எஸ்பிரஸிடம் கூறியதாவது, “ரோஸ்மேரி மற்றும் வெந்தய விதைகளால் செய்யப்பட்ட DIY ஹேர் ஸ்ப்ரே முடியின் உயிர்ச்சக்தி மற்றும் வளர்ச்சியை அதிகரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
ரோஸ்மேரி எண்ணெய் முடி வளர்ச்சியைத் தூண்டும், உச்சந்தலையின் ஆரோக்கியத்தை பராமரிக்கும் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை வெளிப்படுத்தும் என்று சில ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
அதேபோல், வெந்தய விதைகள் முடியை வலுப்படுத்தும் குணங்களைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது மற்றும் முடி உதிர்வைக் குறைக்க உதவும்.
இருப்பினும், அவை பாரம்பரியமாக பொடுகு மற்றும் உச்சந்தலையில் எரிச்சலைத் தணிக்கப் பயன்படுத்தப்பட்டாலும், “அவற்றின் செயல்திறனை உறுதிப்படுத்த விரிவான அறிவியல் ஆராய்ச்சி தேவை” என்று அவர் மேலும் கூறினார்.
“வீட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்ப்ரேக்களின் நேர்மறையான விளைவுகளை பல தனிநபர்கள் சான்றளிக்கின்றனர், ஆனால் இதுபோன்ற பரவலான வீட்டு வைத்தியங்களை நடைமுறைவாதத்துடன் அணுகுவது மிகவும் முக்கியமானது. முடி உதிர்தல் அல்லது உங்கள் உச்சந்தலையின் ஆரோக்கியம் குறித்து உங்களுக்கு கவலைகள் இருந்தால், எப்போதும் தோல் மருத்துவரை அணுகுவது நல்லது. உங்களின் தனிப்பட்ட தேவைகளின் அடிப்படையில் அவர்கள் தகுந்த வழிகாட்டுதலை வழங்க முடியும்,” என்று டாக்டர் பஞ்சாபி கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil