உலக அளவிலான ஜூனியர் மாடல் ஃபேஷன் ஷோ: முதலிடம் பிடித்த கோவை சிறுவன்

ஏற்கனவே தேசிய அளவிலான ராம்ப் வாக் போட்டியில் முகமது நிஷார், இந்திய அளவில் இரண்டாம் பரிசு பெற்றவர்.

ஏற்கனவே தேசிய அளவிலான ராம்ப் வாக் போட்டியில் முகமது நிஷார், இந்திய அளவில் இரண்டாம் பரிசு பெற்றவர்.

author-image
WebDesk
New Update
WhatsApp Image

Junior Model Fashion Show; Coimbatore boy won first prize

தாய்லாந்தில் நடைபெற்ற உலக அளவிலான ஜூனியர் மாடல் ஃபேஷன் ஷோ மற்றும் ராம்ப் வாக் நிகழ்வில், இந்திய அளவில் முதலிடம் பிடித்த 7 வயது சிறுவன் முகமது நிஷார் இன்று கோவை திரும்பினார்.

Advertisment

கோவை ரயில் நிலையத்தில் முகமது நிஷாருக்கு, பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Coimbatore boy

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சிறுவனின் தாயார்;னது மகனுக்கு மாடலிங் துறையில் அதிக விருப்பம் இருந்ததால்2 ஆண்டுகளாக பயிற்சி அளித்தோம். இதற்காக னது மகனை சிறப்பு வகுப்பிற்கு அனுப்பினோம்.

Advertisment
Advertisements

உலகளவிலான ராம்ப் வாக்கில் போட்டி தாய்லாந்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சுமார் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சிறுவர், சிறுமிகள் பங்கேற்றனர்.

அதில் முகமது நிஷார் இந்திய அளவில் முதல் பரிசு பெற்று வெற்றி பெற்றுள்ளார். Title Winner Award வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளதாக தெரிவித்தார்.

ஏற்கனவே தேசிய அளவிலான ராம்ப் வாக் போட்டியில் முகமது நிஷார், இந்திய அளவில் இரண்டாம் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: