தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஜூனியர் மாடலிங் போட்டியில் இரண்டாம் பரிசை வென்ற கோவையை சேர்ந்த சிறுவன் லிவின் நரேஷ்குமாருக்கு கலெக்டர் கிராந்தி குமார் பாடி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
சிறுவர்களுக்கான மாடலின் போட்டி இந்தியாவில் நடைபெற்று வந்தது. இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த ஐந்து வயது சிறுவன் லிவின் நரேஷ்குமார் கலந்து கொண்டு மாவட்டம் மாநிலம் மற்றும் தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
இதன் இறுதிப் போட்டி தாய்லாந்து நாட்டில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் டாட் என்ற பிரிவில் சிறுவன் லிவின் கலந்துகொண்டார். இதில் மொத்தம் நான்கு சுற்றுகள் நடைபெற்றது. அறிமுகம் மற்றும் நேர்காணல் சுற்றில் நடுவர்கள் கேட்க பல்வேறு கேள்விகளுக்கு சிறுவன் லிவின் சிறப்பாக பதில் அளித்து இரண்டாவது சுற்றிற்கு முன்னேறினார்.
இரண்டாவதாக நடந்த திறமை வெளிப்படுத்துதல் சுற்றில் சிறுவன் லிவின் சிலம்பம் சுற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். மூன்றாவதாக நடந்த தேசிய உடை அணிதல் சுற்றில் ராஜ நாகம் போன்ற உடை அணிந்து நடுவர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரையும் கவர்நதார்.
இறுதியாக உடை அலங்காரப் போட்டி நடந்தது. இதில் வெஸ்டர்ன் உடையான கோட் சூட் அணிந்து இந்த ஜூனியர் மாடல் சர்வதேச அளவிலான மாடலிங் போட்டியில் சிறுவன் லிவின் இரண்டாம் பரிசை தட்டி சென்றார். வெற்றி பெற்று கோவை வந்தடைந்த சிறுவன் லிவிங், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடியை சந்தித்து வாழ்த்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“