2 நிமிடம் போதும்; வீட்டிலேயே காட்டன் சேலையை ஈஸியா அயர்ன் பண்ணலாம்… இப்படி டிரை பண்ணுங்க!

வீட்டிலேயே 2 நிமிடங்களில் காட்டன் புடவைகளை எப்படி அயர்ன் செய்வது என்பது குறித்து ரோஸி’ஸ் விலாக்ஸ் என்ற யூடியூப் சேனலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சில டிப்ஸ் மூலம் உங்கள் காட்டன் புடவையை வீட்டிலேயே கச்சிதமாக அயர்ன் செய்யலாம்.

வீட்டிலேயே 2 நிமிடங்களில் காட்டன் புடவைகளை எப்படி அயர்ன் செய்வது என்பது குறித்து ரோஸி’ஸ் விலாக்ஸ் என்ற யூடியூப் சேனலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சில டிப்ஸ் மூலம் உங்கள் காட்டன் புடவையை வீட்டிலேயே கச்சிதமாக அயர்ன் செய்யலாம்.

author-image
WebDesk
New Update
easily iron a cotton saree

வீட்டிலேயே காட்டன் சேலையை ஈஸியா அயர்ன் பண்ணலாம்… இப்படி டிரை பண்ணுங்க!

காட்டன் புடவைகளை அயர்ன் செய்வது பல பெண்களுக்கு, குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஒரு பெரிய சவாலாகவே இருந்து வருகிறது. கடைகளில் அதிக விலை கொடுத்து அயர்ன் செய்யும் நிலை மாறி, இப்போது வீட்டிலேயே 2 நிமிடங்களில் காட்டன் புடவைகளை எப்படி அயர்ன் செய்வது என்பது குறித்து ரோஸி’ஸ் விலாக்ஸ் என்ற யூடியூப் சேனலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சில டிப்ஸ் மூலம் உங்கள் காட்டன் புடவையை வீட்டிலேயே கச்சிதமாக அயர்ன் செய்யலாம்.

Advertisment

அயர்ன் செய்வதற்கு முன் செய்ய வேண்டியவை: காட்டன் புடவைகள் பொதுவாக மிகவும் கடினமாக இருக்கும். அயர்ன் செய்வதற்கு முன், புடவை முழுவதும், குறிப்பாக பார்டர் பகுதியில், தண்ணீரைத் தெளித்துக்கொள்ள வேண்டும். இது புடவையை அயர்ன் செய்ய எளிதாக்கும்.

அயர்ன் செய்யும் முறை

முதலில் புடவையின் 2 பார்டர்களையும் எடுத்து பாதியாக மடித்துக் கொள்ளவும். மடித்த புடவையை அயர்னிங் டேபிள் மீது விரித்து, முதலில் பார்டர் பகுதிகளை மட்டும் அயர்ன் செய்ய வேண்டும். புடவை நீளமாக இருப்பதால், ஒருபுற பார்டரை முதலில் அயர்ன் செய்து, பின்னர் திருப்பி மறுபுற பார்டரையும் அயர்ன் செய்ய வேண்டும். உள்பக்கத்தை உடனடியாக அயர்ன் செய்ய வேண்டாம். இரண்டாக மடித்த புடவையை நாலா மடித்துக் கொள்ளவும். இப்படி மடிப்பதால் அயர்ன் செய்வது எளிதாகவும், கச்சிதமாகவும் இருக்கும். நாலா மடித்த புடவையை திருப்பி, அயர்னிங் டேபிள் மீது விரித்து, உள்பக்கத்தை நன்கு அயர்ன் செய்ய வேண்டும். எங்கும் இடம் விடாமல் அயர்ன் செய்வது முக்கியம். அயர்ன் செய்த பகுதியை மெதுவாகப் பின்னுக்கு இழுத்து ஒரு மடிப்பு மடித்து, அயர்ன் செய்யாத உள்பகுதியை இப்போது அயர்ன் செய்யவும். இது ஒரு கணக்கிற்காக மடிப்பதால், புடவையின் அனைத்துப் பகுதிகளையும் அயர்ன் செய்ய முடியும். விரித்த புடவையை மீண்டும் மடித்து, அயர்னிங் டேபிளில் வைத்து, புடவையின் கார்னர்கள் அனைத்தையும் நன்கு அயர்ன் செய்ய வேண்டும். அயர்ன் செய்யாத பகுதிகளை கவனமாக அயர்ன் செய்து முடிக்கவும்.

Advertisment
Advertisements

அயர்ன் செய்யும் போது, ஒரு துணியில் தண்ணீரை பிழிந்து, அதை புடவையின் மீது தடவி அயர்ன் செய்தால், அயர்னிங் மிகவும் நீட்டாகவும், கச்சிதமாகவும் இருக்கும். இது கடைகளில் அயர்ன் செய்தது போல ஒரு தோற்றத்தை அளிக்கும். வீட்டில் பயன்படுத்தும் கரண்ட் அயர்ன் பாக்ஸ்கள் பொதுவாக எடை குறைவாக இருக்கும். எனவே, அதிக அழுத்தம் கொடுத்து அயர்ன் செய்ய வேண்டும். எடை அதிகமான அயர்ன் பாக்ஸ்கள் இருந்தால், லேசாக அயர்ன் செய்தாலே போதும்.

அயர்ன் செய்த பிறகு, புடவையை மூன்றாக மடிக்க வேண்டும். மடிக்கும்போது, புடவையின் நடுவில் நியூஸ் பேப்பரை வைப்பது நல்லது. இது அலமாரியில் வைக்கும்போது புடவை கலையாமல் இருக்க உதவும். இறுதியாக, மடித்த புடவையின் மீது ஒருமுறை அயர்ன் செய்தால், புடவை பார்க்க புதியது போலவும், கச்சிதமாகவும் இருக்கும்.

இந்த எளிய டிப்ஸ் தெரிந்து கொண்டால், இனி காட்டன் புடவைகளை அயர்ன் செய்ய கடைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. உங்கள் பணத்தையும், நேரத்தையும் மிச்சப்படுத்தலாம். 

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: