3 முறை இந்த எண்ணெய் தேய்த்தால் போதும்… தலைமுடி காடு மாதிரி வளரும்; டாக்டர் தீபா அருளாளன்
முடி உதிர்வுப் பிரச்னைகளுக்கு அடிப்படையான காரணங்கள் என்ன? நிரந்தர தீர்வுகள் உண்டா? என்பதை முடி வளர்ச்சி நிபுணர் தீபா அருளானன் பகிர்ந்து கொண்ட குறிப்புகள் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
முடி உதிர்வுப் பிரச்னைகளுக்கு அடிப்படையான காரணங்கள் என்ன? நிரந்தர தீர்வுகள் உண்டா? என்பதை முடி வளர்ச்சி நிபுணர் தீபா அருளானன் பகிர்ந்து கொண்ட குறிப்புகள் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
3 முறை இந்த எண்ணெய் தேய்த்தால் போதும்… தலைமுடி காடு மாதிரி வளரும்; டாக்டர் தீபா அருளாளன்
தலைமுடி உதிர்வது, வழுக்கை ஏற்படுவது போன்ற பிரச்னைகள் இன்றைய காலத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பெரும் கவலையாக மாறியுள்ளது. இதற்காகப் பலரும் பல்வேறு சிகிச்சை முறைகளையும், விலையுயர்ந்த தயாரிப்புகளையும் தேடி ஓடுகின்றனர். ஆனால், இந்த முடி உதிர்வுப் பிரச்னைகளுக்கு அடிப்படையான காரணங்கள் என்ன? நிரந்தர தீர்வுகள் உண்டா? என்பதை முடி வளர்ச்சி நிபுணர் தீபா அருளானன் பகிர்ந்து கொண்டார்.
Advertisment
பரம்பரை வழுக்கை என்பது மிகவும் பொதுவானது, குறிப்பாக இளம் வயதிலேயே ஆரம்பிப்பது சகஜம்தான் என்று கூறிய டாக்டர் தீபா, இது பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் சவால். ஆனால், இதை சரியான முறையில் அணுகினால் நல்ல பலனைப் பெறலாம் என்றார்.
முடி உதிர்வின் வகைகள்: முடி உதிர்வில் 2 முக்கிய வகைகள் உள்ளதாக டாக்டர். தீபா குறிப்பிட்டார்:
அலோபீசியா அரேட்டா (Alopecia Areata): இது சிறிய, வட்ட வட்டமான திட்டுகளாக முடி உதிரும் நிலை. தலை, தாடி போன்ற பகுதிகளில் திடீரென முடி உதிர்ந்து ஒரு வெற்றுப் பகுதி உருவாகும்.
அலோபீசியா டோட்டலிஸ் (Alopecia Totalis): இது உச்சந்தலையில் உள்ள முடி முழுவதுமாக உதிர்ந்து, தலை முற்றிலும் வழுக்கையாகும் நிலை. இந்த நிலைகளைக் கண்டறிந்தால் உடனடியாக சிகிச்சை பெறுவது அவசியம் என்றும் டாக்டர் தீபா அறிவுறுத்துகிறார்.
Advertisment
Advertisements
முடி உதிர்வுக்கு இயற்கையான வழிகளில் தீர்வு காண விரும்புபவர்களுக்கு, டாக்டர் தீபா எளிய வீட்டு வைத்தியத்தைப் பரிந்துரைத்தார். சின்ன வெங்காயம், பூண்டு இரண்டையும் நன்கு அரைத்து அதை வெதுவெதுப்பான எண்ணெயில் கலந்து, வழுக்கை உள்ள பகுதிகளில் தடவினால், முடி வேர்க்கால்கள் தூண்டப்பட்டு, முடி வளர்ச்சி ஊக்குவிக்கப்படும் என்று கூறினார். இந்த முறை முடி உதிர்வுப் பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கும் என்றார் அவர்.
தலைமுடி ஆரோக்கியமாக வளர சரியான உணவுமுறை அத்தியாவசியம் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்த டாக்டர். தீபா, இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியம் என்றார் அவர். கறிவேப்பிலை சட்னி, தினமும் 2 முட்டை மற்றும் பால் போன்றவற்றை தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என பரிந்துரைத்தார். பாலுடன் சியா விதைகள், ஆளி விதைகள், பூசணி விதைகள், காய்ந்த திராட்சை மற்றும் பேரீச்சம்பழம் சேர்த்து மில்க் ஷேக்காக குடிப்பது கூடுதல் சத்துக்களை அளிக்கும் என்றும் அவர் கூறினார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.