கொய்யா இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து… எடை குறைப்பு, நுரையீரல் பாதுகாப்புக்கு இதை ட்ரை பண்ணுங்க!

எடை குறைப்பு, முடி உதிர்வை தடுப்பது, தோலின் அமைப்பை மேம்படுத்தி முகப்பரு வடுவை நீக்குதல் உள்ளிட்ட பல மருத்துவ குணங்களை கொய்யா பழத்தின் இலைகள் கொண்டுள்ளது. அவற்றை இச்செய்தி தொகுப்பில் காணலாம்

மூன்றாடாக நம்முடன் பயணித்து வரும் கொரோனா தொற்று, நமக்கு கற்றுக்கொடுத்த ஒரே பாடம் உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்வது தான். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள், இந்த பானத்தை குடியுங்கள் என பலவற்றில் படித்திருக்கலாம்.

ஆனால், கொய்யா இலை ஆரோக்கியத்திற்கும் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் மிகவும் நன்மை பயக்கும் என்று எப்போதாவது நீங்கள் கேள்விப்பட்டது உண்டா? இதனை அழகு சாதன பொருளாகவும் பயன்படுத்தலாம் என்பது தான் உண்மை. இந்த செய்தி தொகுப்பில் அதனை விரிவாக காணுங்கள்.

கொய்யா, அல்லது அம்ரூட், பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய ஒரு சூப்பர்ஃபுட் என்பது அனைவருக்கும் தெரியும். மிகவும் சுவையான இந்த பழத்தின் இலையில் பல ஆரோக்கிய பண்புகள் உள்ளன. முதலில், கொய்யா இலை கலந்து தேநீரை குடித்து ஆரம்பிக்கலாம்.

இது, பல ஆண்டுகளாக மெக்ஸிகோ மற்றும் தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் பாரம்பரிய மருத்துவத்தின் ஒரு பகுதியாக இருப்பதாக நம்பப்படுகிறது. சிறிது தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் இலைகளை ஊறவைக்க வேண்டும். பிறகு அதனை வடிகட்டி குடிக்க வேண்டும்.

வயிற்றுப்போக்கால் அவதிப்படுபவர்களுக்கு கொய்யா இலையில் தேநீர் அருந்தினால் ஓரளவு நிவாரணம் கிடைக்கும். இது வயிற்றுப் பிடிப்புகளை எளிதாக்கும் மற்றும் விரைவாக மீண்டு வர ஊக்குவிக்கும்.

மேலும், இது குடிக்க கூடிய திரவம் என்பதால், அது உங்களையும் நீரேற்றமாக வைத்திருக்கும். ஒரு கப் வெந்நீரில் இலைகளைச் சேர்த்து வடிகட்டி, வெறும் வயிற்றில் உட்கொள்ளவும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, கொய்யா இலை தேநீர் எடை இழப்புக்கும் உதவுகிறது. ஒரு சிப் குடித்தால் போதும், பானம் உடலில் இருக்கும் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் சர்க்கரையாக மாறுவதைத் தடுத்திடும்.

இந்த இலைகளில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து உள்ளது. எனவே, நீங்கள் லேசான சளியால் பாதிக்கப்பட்டிருந்தால், கொய்யா இலை தேநீர் குடித்து பாருங்கள். இது சளி சுவாச பாதை, தொண்டை மற்றும் நுரையீரலை அகற்றுவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும், உங்கள் தோலின் அமைப்பை மேம்படுத்தவும், முகப்பரு வடுக்களை அகற்றவும் விரும்பினால், இந்த இலைகள் உபயோகமாக இருக்கும். இலைகளை நன்கு நசுக்கி, வடு இருக்கும் இடத்தில் தடவி வந்தால், விரைவில் வித்தியாசத்தை உணர முடியும்.

முடி உதிர்தல் மற்றும் அளவு குறைவதால் அவதிப்படுபவர்களுக்கு, கொய்யா இலைகள் சிறந்த தீர்வாகும். நீங்கள் இலைகளை வேகவைத்து உச்சந்தலையில் மசாஜ் செய்தால் போதும். குறிப்பாக, மசாஜ் செய்யும் போது தண்ணீர் சூடாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

இதுமட்டுமின்றி, கொய்யா இலை தேநீர் உங்கள் நரம்பு மண்டலங்கள் மற்றும் மனதை அமைதிப்படுத்தி, சிறந்த தூக்கம் கிடைத்திட வழிவகுப்பதாக சொல்லப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Just how beneficial is the guava leaf find out

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com