/indian-express-tamil/media/media_files/2025/05/22/mYh6A3Qa7yALneRYGFmx.jpg)
ஒரு தக்காளி போதும்… இப்படி செய்தால் கருத்துபோன தங்க நகைகள் புதுசு போல் மின்னும்!
பெண்களின் அழகை பல மடங்கு அதிகரிக்கும் அலங்காரப் பொருட்களில் ஒன்றுதான் நகைகள். குறிப்பாக, தங்க மற்றும் கவரிங் நகைகள் பெண்களின் இதயத்தை கொள்ளை கொள்ளும். ஆனால், இந்த நகைகள் நம் உடலில் தொடர்ந்து இருப்பதால் அவற்றில் அழுக்கு படிந்து மங்கி விடுவது இயல்பு. இந்த அழுக்கை நீக்கி நகைகளை புதிது போல் பளபளப்பாக வைத்திருப்பது எப்படி என்பது குறித்து இந்தப் பதிவில் காணலாம்.
தங்க நகைகளை சுத்தம் செய்வது எப்படி?
தங்க நகைகள் என்பது பெண்களின் ஆபரணங்களில் மிகவும் முக்கியமான ஒன்று. இந்த நகைகளை சரியாக பராமரிப்பது அவசியம். இதற்கு பல எளிய வழிமுறைகள் உள்ளன. வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு எப்படி சுத்தம் செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- தக்காளி: ஒரு பாதி பழுத்த தக்காளி
- உப்பு: சிறிதளவு
- துணி: மென்மையான பருத்தி துணி அல்லது டிஷ்யூ பேப்பர்
முதலில், பாதி தக்காளியில் இருந்து ஒரு கால் பகுதியை வெட்டி எடுத்து, அதிலுள்ள விதைகள் அனைத்தையும் நீக்கிவிடவும். விதை நீக்கப்பட்ட தக்காளி துண்டின் மீது சிறிதளவு உப்பைத் தூவவும். இது தங்கத்தில் உள்ள அழுக்குகளை நீக்க உதவும். இப்போது, இந்த தக்காளி துண்டைக் கொண்டு உங்கள் தங்க நகைகளை மெதுவாகவும், கவனமாகவும் தேய்க்கவும். கம்மல்கள் அல்லது நுணுக்கமான வடிவமைப்புகள் உள்ள நகைகளுக்கு, தக்காளியை ஒரு கூம்பு போல செதுக்கிக் கொண்டால், மூலை முடுக்குகளில் உள்ள அழுக்குகளையும் சுத்தம் செய்ய வசதியாக இருக்கும். நன்றாகத் தேய்த்த பிறகு, நகைகளை சுத்தமான நீரில் அலசவும். இறுதியாக, ஒரு மென்மையான பருத்தி துணி அல்லது டிஷ்யூ பேப்பரால் நகைகளை மெதுவாகத் துடைத்து உலர விடவும்.
நகைகளை பராமரிப்பதற்கான சில குறிப்புகள்: நகைகளை தினமும் அணிந்த பிறகு மென்மையான துணியால் துடைத்து வைக்க வேண்டும். குளிக்கும் போது, சமையல் செய்யும் போது அல்லது வேறு ஏதேனும் வேலைகளை செய்யும் போது நகைகளை அணிய வேண்டாம். நகைகளை வெயிலில் அல்லது வெப்பமான இடத்தில் வைக்க வேண்டாம். நகைகளை வேறு நகைகளுடன் சேர்த்து வைக்க வேண்டாம். விலை உயர்ந்த நகைகளை பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.