2025-ல் நீங்கள் கவனிக்க வேண்டிய ட்ரெண்டிங் கொரியன் ஸ்கின் கேர் டிப்ஸ்

இந்த 2025-ஆம் ஆண்டில் நீங்கள் கவனிக்க மற்றும் பின்பற்ற வேண்டிய கொரியன் ஸ்கின் கேர் டிப்ஸ் குறித்து வல்லுநர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்த 2025-ஆம் ஆண்டில் நீங்கள் கவனிக்க மற்றும் பின்பற்ற வேண்டிய கொரியன் ஸ்கின் கேர் டிப்ஸ் குறித்து வல்லுநர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
K Skin care

உலகளவில் பின்பற்றப்படும் ஸ்கின் கேர் பராமரிப்பில், கொரியன் ஸ்கின் கேர்  புதிய ட்ரெண்டை அமைத்தது என்று கூறலாம். அந்த அளவிற்கு முடி மற்றும் சரும பராமரிப்பில் இவை பெரும் பங்கு வகிக்கின்றன. Polydeoxyribonucleotide என்று சொல்லக் கூடிய புதிய பொருட்களையும் கொரியன் ஸ்கின் கேர் அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு நீங்கள் பின்பற்றக் கூடிய ஸ்கின் கேர் டிப்ஸ் குறித்து சரும நிபுணர் மருத்துவர் ரிங்கி கபூர் தெரிவித்துள்ளார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: K-beauty trends to look out for in 2025, according to a dermatologist

15 ஸ்டெப் ஹேர் கேர் டிப்ஸ்

முன்னர், ஷாம்பூ மற்றும் கண்டிஷனிங் செய்தாலே முடி பராமரிப்பில் போதுமானதாக இருந்தது. ஆனால், முடி பராமரிப்பிலேயே 15 ஸ்டெப்ஸ் தற்போது பின்பற்றப்படுவதாக கூறப்படுகிறது. இவை பொடுகு தொல்லை, அதிகப்படியான எண்ணெய் பிரச்சனைகளை சீரமைக்கிறது. அதன்படி, எக்ஸ்ஃபாயிலேஷன், மசாஜ், டீப் க்ளென்ஸிங், தனித்துவம் வாய்ந்த ஷாம்புக்கள், ஹேர் மாஸ்க், லேயர்ட் கண்டிஷனிங் போன்றவற்றை முடி பராமரிப்பில் மேற்கொள்வது அவசியம் ஆகும்.

சரும பரமாரிப்பு

Polydeoxyribonucleotide என்ற வார்த்தை சரும பராமரிப்பில் தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த டிஎன்ஏ அடிப்படையிலான மூலப்பொருள், இப்போது உயர்தர சீரம்கள், கிரீம்கள் மற்றும் முக சிகிச்சைக்கு தேவைப்படும் பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. இவை கொலஜன் உற்பத்தியை அதிகப்படுத்துவதாக கூறப்படுகிறது. Polydeoxyribonucleotide-ல் விரைவாக வயதாவதை தடுக்கும் தன்மை இருப்பதாகவும் மருத்துவர் கபூர் குறிப்பிட்டுள்ளார். 

3டி மாஸ்க்

Advertisment
Advertisements

சாதாரண மாஸ்குகளை கடந்து இப்போது 3டி மாஸ்க்குகள் சந்தைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இவை ஒவ்வொருவரது முகத்தின் அமைப்பிற்கும் ஏற்றார் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை சருமத்தில் நீர்ச்சத்து நிலைத்திருப்பதை உறுதி செய்கிறது.

வடிவமைக்கப்பட்ட மேக்-அப் சாதனங்கள்

நம் சருமத்தின் நிறத்திற்கு ஏற்றார் போல் வடிவமைக்கப்பட்ட மேக்-அப் மற்றும் அழகு சாதனங்களை தற்போது கொரியா முன்னிலைப்படுத்துகிறது. இவை முகத்திற்கு மேலும் பொலிவை வழங்குகின்றன.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Best ingredients for dry skin Amazing benefits of retinol for skin

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: