மழைக்கு சூடான கார போண்டா ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பச்சை அரிசி - 1 கப்
உளுந்து - 1 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத் தூள் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - 200 கிராம்
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை சுத்தம் செய்து 4 மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும். ஊறியதும் மீண்டும் ஒரு முறை அலசி மிக்ஸியில் போட்டு அரைக்கவும். இந்த மாவுடன் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி , பெருங்காயத்தூள், உப்பு என சேர்த்து பிசையவும். கலவையை நன்கு பிசையவும்.
இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போடவும். பொன்னிறமாக வெந்து வந்ததும் எடுத்து பரிமாறவும். அவ்வளவு தான் சூடான கார போண்டா ரெசிபி ரெடி. காரச்சட்னி, தேங்காய் சட்னி உடன் தொட்டு சாப்பிட சுவையான இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“