‘சண்டைக்கோழிகள்தான் ஆனா நாங்க ரொம்ப கியூட்’ – காற்றுக்கென்ன வேலி தர்ஷன்-பிரியங்கா ஃப்ரெண்ட்ஷிப்!

Kaatrukenna Veli Dharshan Priyanka Friendship Interview இயக்குநரே அந்த சீனை ஓகே சொன்னாலும் மறுமுறை எடுக்கவேண்டும் என அடம் பிடிப்பது ப்ரியங்காவின் வழக்கம்

Kaatrukenna Veli Dharshan Priyanka Friendship Interview Tamil News
Kaatrukenna Veli Dharshan Priyanka Friendship Interview Tamil News

Kaatrukenna Veli Dharshan Priyanka Friendship Interview Tamil News : சின்னதிரை தொடரில் வரும் முன்னணி கதாநாயகன் மற்றும் கதாநாயகி திரையில் மட்டுமல்ல, திரைக்கு பின்னாடியும் அதே அளவிலான நட்பைத் தக்கவைத்துக்கொள்பவர்கள் பலரைப் பார்த்திருக்கிறோம். அவர்களில் சிலர், திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ்வதையும் பார்த்திருக்கிறோம். அந்த வரிசையில், தற்போது ஹிட் சீரியல் லிஸ்டில் இடம்பெற்றிருக்கும் காற்றுக்கென்ன வேலி தொடரில் நடித்து வரும் தர்ஷன் மற்றும் பிரியங்கா ரியல் லைஃப்பில் சண்டைக்கோழிகள்.

 சன் டிவியில் சாக்லேட் சீரியல் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார் பிரியங்கா. தனது தாய்மொழி தமிழ் இல்லையென்றாலும், அசத்தலான நடிப்பால் பலரின் பாராட்டுகளைப் பெற்று பிறகு விஜய் டிவியின் காற்றுக்கென்ன வேலி தொடருக்கான ஆடிஷனுக்கு அழைக்கப்பட்டார். அங்குச் சென்றபோது தர்ஷனை பார்த்த பிரியங்காவிற்கு ஷாக். ஏனென்றால், மியூச்சுவல் நண்பர் மூலமாக ஏற்கெனவே இருவரும் நன்கு பரீட்சையமானவர்கள். அப்படி இருந்தவர்கள், இப்போது எப்போதும் முட்டிக்கொள்ளும் சண்டைக்கோழிகளாக உலாவி வருகின்றனர்.

முதல் லுக் டெஸ்ட் நிறைவடைந்தபிறகு, மீண்டும் ஒருமுறை லுக் டெஸ்ட் செய்யவேண்டும் என்று தர்ஷனுக்கு அழைப்பு வந்திருக்கிறது. காரணம், பிரியங்கா தர்ஷனைவிட உயரமாகத் தெரிகிறார் என்பதால்தான். அதனால், இரண்டாவது லுக் டெஸ்டில் தர்ஷனுக்கு ஹீல்ஸ் வைத்த ஷூ கொடுக்கப்பட்டிருக்கிறது. கொஞ்சம் கடுப்பாக இருந்தாலும், அதையும் செய்து முடித்து, ஆடிஷனில் செலெக்ட் செய்யப்பட்டிருக்கின்றனர் இந்த ஜோடி.

மணிமேகலையை பொண்ணு பார்க்க வரும்போது, கவுண்டமணி செந்தில் இருவரும் மாறி மாறி உண்மையை சொல்லிக்கொள்வார்களே அதுபோல் இருவரிடம் எந்த கேள்வி கேட்டாலும், அடித்துக்கொள்கின்றனர். கெட்டவார்த்தை கொஞ்சமும் பேசாத பிரியங்கா அதற்கு நேர்மாறாக தர்ஷன் என ஏராளமான விஷயங்கள் எதிர்மறையாக இருந்தாலும் இவர்களுடைய நட்பு, கியூட்.

2 வருடமாக தன் காதலுக்கு பச்சை கொடி ‘அந்த பெண்’ காட்டுவார் என்று காத்திருக்கிறார் தர்ஷன். யார் என்றுதான் தெரியவில்லை. என்றாலும் ‘நான் பக்கா சிங்கிள்’ என்று உரக்ககுரலில் சொல்கிறார் பிரியங்கா. ஷூட்டிங்கின்போது ஒவ்வொரு ஷாட் முடிந்தபிறகும் மானிட்டரை பார்த்து தான் அழகாக தெரிகிறோமா என்பதை செக் செய்வது, இயக்குநரே அந்த சீனை ஓகே சொன்னாலும் மறுமுறை எடுக்கவேண்டும் என அடம் பிடிப்பது ப்ரியங்காவின் வழக்கம் என்றால், ஷூட்டிங் ஸ்பாட்டில் அப்படியே அமைதியே உருவமாய் உட்கார்ந்திருப்பாராம் தர்ஷன். கான்ட்ராஸ்ட் ஜோடி!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Kaatrukenna veli dharshan priyanka friendship interview tamil news

Next Story
மட்டன் சுக்கான்னா இப்படி தான் செய்யனும்… என்ன ஒரு டேஸ்ட்டு!Mutton Sukka varuval in Tamil: Mutton Chops village style in tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com