கடைக்குட்டி சிங்கத்தின் வெற்றி...சொந்த மண்ணில் பொங்கல் வைத்த இயக்குனர்!

வெற்றி பெற்றதால் அந்த  வெற்றியையும் தனது கிராம மக்களுடன் கொண்டாட முடிவு செய்துள்ளார்.

கடைக்குட்டி சிங்கம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து படத்தின் இயக்குனர் பாண்டியராஜ் தனது சொந்த ஊரில் கடாவெட்டி பொங்கல் வைத்துள்ளார்.

கடைக்குட்டி சிங்கம் பிரம்மாண்ட வெற்றி:

இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, சத்யராஜ், சாயிஷா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிப்பில் சென்ற மாதம் கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் வெளியாகியது விவசாயம்,குடும்ப உறவு என குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ள கடைக்குட்டி சிங்கம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

படத்தை பார்த்த ரசிகர்களும் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு முழுமையான குடும்ப படத்தை பார்த்ததாக தெரிவித்துள்ளனர். திரையரங்களில் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கும் கடைக்குட்டி சிங்கம் படத்தை பார்த்த பிரபலங்களும் சமூகவலைத்தளங்களில் தங்களின் கருத்துக்களை கூறி இருந்தனர்.

மேலும் படத்தை பார்த்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு படத்தை பார்த்து இயக்குனர் மற்றும்  படக்குழுவினரை வெகுவாக பாராட்டி இருந்தார். ”ஆபாசம் இல்லாமல் காட்டிய சுவாரசியமான நல்ல படம்” என்றும் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். ’

இதுப்போன்ற பல பாராட்டுகள் படத்திற்கு குவிந்தன. கடைக்குட்டி சிங்கம் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய சாதனை செய்திருந்தது. காலாவிற்கு பிறகு பாக் ஆபிஸில் இடம்பெற்றிருந்த திரைப்படமாகவும் கடைக்குட்டி சிங்கம் இருந்தது.

கடைக்குட்டி சிங்கம்

கடைக்குட்டி சிங்கம் படத்தில் வரும் காட்சி

இந்நிலையில் இந்த அனைத்து வெற்றையும் கொண்டாடும் வகையில் இயக்குனர் பாண்டியராஜ் தனது சொந்த ஊரான புதுக் கோட்டைக்கு படைஎடுத்துள்ளார்.  கிராமத்தின் கதையை அப்படியே திரையில் காண்பித்து வெற்றி பெற்றதால் அந்த  வெற்றியையும் தனது கிராம மக்களுடன் கொண்டாட முடிவு செய்துள்ளார்.

 

கடைக்குட்டி சிங்கம்

பொங்கல் வைத்த பாண்டியராஜ்

அதன்படி புதுக்கோட்டையில் உள்ள தனது  சொந்த ஊரான விராச்சிலைக்கு சென்று அக்கம் தனது உறவினர்கள் மற்றும் கிராம மக்களுடன் சேர்து கெடா வெட்டி பொங்கல் வைத்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close