விஜய் டிவியையும், ரியாலிட்டி ஷோக்களையும் பிரிக்க முடியாது.
விஜய் டிவியின் பலமே அந்த சேனலில் பணியாற்றும் காமெடியன்கள் தான். மற்ற டிவி சேனல்களுடன் ஒப்பிடுகையில் விஜய் டிவியில் வரும் காமெடியன்கள் மிகவும் திறமையானவர்களாக இருக்கின்றனர். அதற்கேற்ற மாதிரி விஜய் டிவியும், காமெடியன்களை ஒரே நிகழ்ச்சியுடன் ஓரம் கட்டாமல், சீரியல், ரியாலிட்டி ஷோ என தாங்கள் ஒளிபரப்பும் எல்லா நிகழ்ச்சிகளிலும் அவர்களுக்கான வாய்ப்பை வழங்கி வருகிறது.
அந்தவகையில் கலக்க போவது யாரு சீசன் 5 மூலம் விஜய் டிவியில் என்ட்ரி ஆனவர் நவீன். ரசிகர்களை பொறுத்தவரை இந்த சீசன் 5 மிகவும் ஸ்பெஷல். இதில் தான் அறந்தாங்கி நிஷா- பழனி காம்போ, சரத்- தீனா காம்போ, முல்லை-கோதண்டம் காம்போ, குரேஷி என ஒரு காமெடியன் பட்டாளமே ரசிகர்களை வயிறு வலிக்க வலிக்க சிரிக்க வைத்தது. இன்று சுந்தரி சீரியலில் நடித்து பிரபலமான கேப்ரியல்லாவும் இந்த சீசனில் ஒரு போட்டியாளராக இருந்தவர் தான்.
அதிலும் குறிப்பாக நவீன், பிரபல நடிகர்களை அப்படியே அச்சு வடித்தாற்போல மிமிக்ரி செய்வதில், மிகவும் ஸ்பெஷலிஸ்ட்.
இப்படி தனது அசாத்தியமான திறமையால், ஃபைனல்ஸ் வரை வந்தார் நவீன். ஃபைனலில் இவர் வெல்லவில்லை என்றாலும், அப்துல் கலாம் போல மிமிக்ரி செய்ததை பார்த்து, அந்த அரங்கமே எழுந்து நின்று கைத்தட்டியது. கெஸ்டாக வந்த சிவகார்த்திகேயன் மேடையேறி சென்று நவீனை கட்டிப்பிடித்து வாழ்த்தினார்.
இப்போது நவீன் விஜய் டிவியின் பாவம் கணேசன் சீரியலில், கணேசனாக நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய் டிவியில் ஒரு சாதரண போட்டியாளராக அறிமுகமாகி, இன்று அதே சேனலில், சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார் நவீன்.
தனிப்பட்ட வாழ்க்கை பொறுத்தவரையில் நவீனுக்கு ஏற்கெனவே திருமணமாகி முதல் மனைவியிடம் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, அவரை பிரிந்தார். இதற்கிடையே, மலேசியாவை சேர்ந்த கிருஷ்ணகுமாரிக்கு, நவீனுக்கும் பிடித்திருந்த நிலையில், இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தபோது, முதல் மனைவி அளித்த புகாரின் பேரில் திருமணம் நின்றது.
பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை, இப்போது நவீன், கிருஷ்ணகுமாரியுடன் வாழ்ந்து வருகிறார்.
சமீபத்தில், பேர் வச்சாலும், வைக்காம போனாலும் பாடல், யுவன் ரீமேக்கில் வைரலானது. இந்த பாடலுக்கு, நவீனும், கிருஷ்ணகுமாரியும் ஆடிய வீடியோவை வெளியிட்டார்.
இந்நிலையில், இன்னும் சில தினங்களில் விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நடக்க இருப்பதை முன்னிட்டு, வெற்றி நடைபோடும் மதியமே எனும் ஷோ மூலம் அதன் முன்னோட்டம் ஒளிபரப்பாக உள்ளது.
அதில்’ நவீன் மேடையில் இருக்க, அங்கு சர்பிரைஸாக வந்த கிருஷ்ணகுமாரி, உனக்கெல்லாம் குழந்தையே பிறக்காது, சீக்கிரம் பிரிஞ்சிடுவீங்கனு சாபம் விட்டாங்க. சாபம் விட்டவங்களுக்கு ரொம்ப நன்றி என எமோஷனலாகி பேச, நவீன் தன் நெஞ்சில், கிருஷ்ணகுமாரி முகத்தை டாட்டூவாக குத்தியிருப்பதை காட்டுகிறார். இதைப் பார்க்கும் போது, கிருஷ்ணகுமாரி இப்போது கர்ப்பமாக இருப்பதாக தெரிகிறது.
இதோ அந்த புரோமோ!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“