செப் தீனா யூடியூப் சேனலில் யாசின் எனப்வர் செய்த தக்காளி ஜாம் ரெசிபி. நீங்களும் ஒரு முறை செய்துபாருங்க.
தேவையான பொருட்கள்
தக்காளி 3 கிலோ
1 ½ கிலோ சர்க்கரை
நெய் 200 எம்.எல்
எண்ணெய் – 100 எம்.எல்
முந்திரி – 50 கிராம்
உலர் திராட்சை – 50 கிராம்
விதையில்லா டேட்ஸ் ¼ கிலோ
ஏலக்காய் 10
செய்முறை: தக்காளியின் கண் பகுதியை நாம் நீக்க வேண்டும். தொடர்ந்து அதனை சின்னதாக நறுக்க வேண்டும். இதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அடுப்பில் வைக்கவும். 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து, தக்காளியை நன்றாக வேக வைக்கவும். தக்காளி நன்றாக வெந்ததும், தொடர்ந்து சர்கக்ரை சேர்த்து கிளரவும். ஏலக்காய்- சர்க்கரை சேர்த்து அரைத்ததை சேர்க்கவும். நன்றாக கிளரவும். தொடர்ந்து இதில் டேட்ஸ் சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதை நன்றாக கிளரவும். இதை தனியாக எடுத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் சேர்த்து அதில் முந்திரி, திராட்சை சேர்த்து கிளரவும். தொடர்ந்து தக்காளி ஜாம்யை சேர்த்து கிளரவும். கடைசியாக இன்னும் கொஞ்சம் நெய் சேர்க்கவும்.