இது செப் தீனா, செய்த கல்யாண வீட்டு மோர் குழம்பு ரெசிபி. நீங்களும் செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
வெண்டைக்காய்- ¼ கிலோ
தேங்காய் துருவல்- 2 மூடி
பச்சை மிளகாய் – 6
வத்தல் – 6
துவரம் பருப்பு – 100 கிராம்
கடலை பருப்பு – 100 கிராம்
கொத்தமல்லி விதை – 50 கிராம்
சீராகம் – 10 கிராம்
மஞ்சள் பொடி – 2 ஸ்பூன்
உப்பு
பெருங்காயம்
இஞ்சி – ஒரு துண்டு
கடுகு- 1 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – தாளிக்க
கருவேப்பிலை
நெல்லிக்காய் அளவு புளி
செய்முறை : ஒரு பாத்திரத்தில் துவரம் பருப்பு, கொதமல்லி, சீரகம், வத்தலை தண்ணீர் சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். தொடர்ந்து ஊறிய பிறகு இதை தேங்காய், பச்சை மிளகாய், பெருங்காயம், இஞ்சி சேர்த்து அரைத்துகொள்ளவும். வெண்டைக்காய்யை துண்டுகளாக நறுக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து, புளி கரைத்ததை சேர்க்கவும். தொடர்ந்து வெண்டைக்காய் நறுக்கியதை சேர்க்கவும். தொடர்ந்து மஞ்சள் பொடி சேர்க்கவும். உப்பு சேர்க்கவும். தொடர்ந்து வெண்டக்காய் வெந்ததும். அதை தனியாக எடுத்து வைக்கவும். தயிரை நன்றாக கட்டியாக தண்ணீர் சேர்த்து அடிக்க வேண்டும். தொடர்ந்து மோரில், மஞ்சள் பொடி, உப்பு, அரைத்து வைத்த மசாலாவை சேர்க்கவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் இந்த மோரை சேர்க்கவும். தொடர்ந்து வெண்டைக்காய் சேர்த்து , மிதமான தீயில் வைக்கவும். தொடர்ந்து நுரை கட்டி வர வேண்டும். அப்போது அடிப்பை அணைக்கவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் சேர்த்து, கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து மோர் குழம்பில் கொட்டவும்.