Advertisment

பிளைண்ட் டேட், வாயிஸ் மெயில், ஃபர்ஸ்ட் மீட்: கமலா ஹாரிஸ், டக்ளஸ் எம்ஹாஃப் லவ் ஸ்டோரி

ஒரு வருட கால காதலுக்குப் பிறகு, ஹாரிஸ் 10 ஆண்டுகளுக்கு முன்பு கலிபோர்னியாவில் அட்டர்னி ஜெனரலாக இருந்தபோது டக்ளஸ் எம்ஹாஃப் என்பவரை மணந்தார். டக்ளஸ் ஒரு உயர் அதிகார எண்டெர்டெயின்மென்ட் வழக்கறிஞர்.

author-image
WebDesk
New Update
Kamala Harris Doug Emhoff

Kamala Harris Doug Emhoff Love story

கமலா ஹாரிஸுக்கு 2021 இல் பதவி வழங்கப்பட்டபோது, அமெரிக்கா தனது முதல் கறுப்பின, இந்திய வம்சாவளி பெண் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுத்தது. அவரது அமெரிக்க கணவர் அவருக்கு துணையாக நின்றார்.
ஒரு வருட கால காதலுக்குப் பிறகு, ஹாரிஸ் 10 ஆண்டுகளுக்கு முன்பு கலிபோர்னியாவில் அட்டர்னி ஜெனரலாக இருந்தபோது டக்ளஸ் எம்ஹாஃப் என்பவரை மணந்தார். டக்ளஸ் ஒரு உயர் அதிகார எண்டெர்டெயின்மென்ட் வழக்கறிஞர். 
இப்போது டொனால்ட் டிரம்பிற்கு எதிரான ஜனநாயகக் கட்சியினரின் பந்தயத்தில் ஜோ பிடனுக்கு பதிலாக ஹாரிஸ் பொறுப்பேற்றுள்ளார். மேலும் அவரது கணவர் எம்ஹாஃப் கூட அவருடன் இணைந்து அமெரிக்காவின் முதல் ஜென்டில்மேன் என்ற வரலாற்றைப் படைக்கக்கூடும். 
தம்பதியின் ரிலேஷன்ஷிப் டைம்லைன் இங்கே
2013: டக் மற்றும் கமலா சந்தித்த போது
ஹாரிஸ் தனது தி ட்ரூத்ஸ் வி ஹோல்ட்: ஆன் அமெரிக்கன் ஜர்னியில் விவரித்தபடி, இந்த ஜோடி 2013 இல் பரஸ்பர நண்பரான கிறிசெட் ஹட்லின் ஏற்பாடு செய்த பிளைண்ட் டேட்டில் சந்தித்தது.
லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஒரு "அழகான" நபரை பற்றி அவளுடைய நண்பர் சொன்னாள், அவர் ஹாரிஸுக்கு பொருத்தமானவராக தோன்றினார். 
"அவர் பெயர் டக் எம்ஹாஃப், ஆனால் நீங்கள் அவரை கூகுள் செய்ய மாட்டீர்கள் என்று எனக்கு உறுதியளிக்கவும். அதைப் பற்றி அதிகம் யோசிக்க வேண்டாம், அவரை மட்டும் சந்திக்கவும். நான் ஏற்கனவே உங்கள் எண்ணை அவரிடம் கொடுத்துள்ளேன். அவர் அழைப்பார் என்று அந்த நண்பர் கூறினார். 

Advertisment


சில நாட்களுக்குப் பிறகு, கூடைப்பந்து விளையாடிக் கொண்டிருந்த போது எம்ஹாஃப், ஹாரிஸுக்கு மெசேஜ் அனுப்பினார். மறுநாள் தொலைபேசியில் பேசுவதற்கு முன் அவர்கள் சுருக்கமாக மெசேஜ்களை பரிமாறிக்கொண்டனர். 
அடுத்த நாள் காலை, எம்ஹாஃப் ஹாரிஸுக்கு ஒரு வாயிஸ் மெயில் அனுப்பினார்.. 
’நான் இன்றுவரை சேமித்து வைத்திருக்கும் வாயிஸ் மெயில் அது. அவர் ஒரு நல்ல பையனைப் போல் இருந்தார், மேலும் மேலும் அறிய ஆர்வமாக இருந்தேன்.. அவரிடம் பாசாங்கு இல்லை, ஆணவம் இல்லை. எங்கள் முதல் சந்திப்பிலேயே அவர் என்னுடன் மிகவும் கம்ஃபர்ட் ஆக இருந்தார். அதுதான் அவரை உடனே பிடிக்க காரணம்’, என்று ஹாரிஸ் அவர்களின் முதல் சந்திப்பைப் பற்றி எழுதினார். 
2013: கமலா டக்கின் குழந்தைகளான கோல் மற்றும் எலாவை சந்தித்தபோது
எம்ஹாஃப் ஏற்கெனவே கெர்ஸ்டின் எம்ஹாஃப் என்பவரை மணந்து விவகாரத்து செய்திருந்தார். இந்த தம்பதிக்கு கோல் மற்றும் எல்லா என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர்.
விவாகரத்து பெற்ற குழந்தையாக, உங்கள் பெற்றோர் மற்றவர்களுடன் பழகத் தொடங்கும் போது எவ்வளவு கடினமாக இருக்கும் என்று எனக்குத் தெரியும், டக் மற்றும் நானும் நீண்ட காலத்திற்கு இதில் இருப்போம் என்பதை உறுதிப்படுத்தும் வரை அவர்களின் வாழ்க்கையில் என்னை நுழைக்க வேண்டாம் என்று நான் உறுதியாக இருந்தேன். 
குழந்தைகளைச் சந்திப்பதற்காக அவர்கள் முதல் டேட்டுக்கு பிறகு "சுமார் இரண்டு மாதங்கள்" காத்திருந்ததாக ஹாரிஸ் கூறினார்… 
அவர்கள் புத்திசாலித்தனமான, திறமையான, குழந்தைகள், நான் ஏற்கனவே டக் உடன் பிணைந்துவிட்டேன், ஆனால் கோல் மற்றும் எலா தான் என்னை உள்ளே இழுத்ததாக நான் நம்புகிறேன்… 
2014: டக் கமலாவிடம் பிரபொஸ் செய்தபோது

Kamala Harris Doug
இத்தாலிக்கு ஒரு பயணத்திற்கு முன் காணாமல் போன ஒரு ஜோடி பேன்டை கண்டுபிடிப்பதில் தீவிரமாக இருந்தபோது எம்ஹாஃப் என்னிடம் காதலை சொன்னார். 
"நான் என் வாழ்க்கையை உன்னுடன் வாழ விரும்புகிறேன்," என்று எம்ஹாஃப் கூறினார்.
ஆனால் என் அவர் பேசுவது எதுவும் என் காதில் விழவில்லை, நான் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. என் மனம் இன்னும் பிளாக் பேன்டில் தான் இருந்தது. 
அவர் மறுபடியும், நான் உன்னுடன் என் வாழ்க்கையை வாழ விரும்புகிறேன் என்று கூறினார்… 
நான் நிமிர்ந்து பார்த்தபோது, அவர் ஒரு முழங்காலில் நின்று கொண்டிருந்தார். அவர் Ponte Vecchio முன் பிரபொஸ் செய்ய திட்டமிட்டார், ஆனால் அவர் மோதிரத்தை வைத்திருந்தால், அவரால் அதை ரகசியமாக வைக்க முடியவில்லை..  அந்த நேரம் நான் சந்தோஷத்தில் வெடித்து அழுதேன்.. என்று ஹாரிஸ் விவரித்தார்…
2014: கமலா மற்றும் டக் திருமணம் செய்தபோது
ஹாரிஸ் மற்றும் எம்ஹாஃப், ஆகஸ்ட் 22, 2014 அன்று ஹாரிஸின் தங்கையான மாயா ஏற்பாடு செய்த ஒரு சிறிய விழாவில் திருமணம் செய்து கொண்டனர். எம்ஹாஃப் குழந்தைகளும் ஹாரிஸும் "ஸ்டெப் மாம்" என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டாம் என்று ஒப்புக்கொண்டனர், அதற்குப் பதிலாக "மோமலா" என்பதைத் தேர்ந்தெடுத்தனர்.
ஹாரிஸ் கலிபோர்னியாவின் செனட்டர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஹாரிஸ் மற்றும் எம்ஹாஃப் வாஷிங்டன், டி.சி.யில் அதிக காலம் செலவிட்டனர். ஜனவரி 2020 இல், எம்ஹாஃப் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக சட்ட மையத்தில் சட்டம் கற்பிக்கத் தொடங்கினார்…
ஜனவரி 20, 2021 அன்று, ஹாரிஸ் துணைத் தலைவராகப் பதவியேற்றார், இதன் மூலம் எம்ஹாஃப் இரண்டாவது ஜென்டில்மேன் ஆனார்.
Read in English: How Kamala Harris found love with her American husband Douglas Emhoff
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Kamala Harris
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment