Advertisment

கமலா ஹாரிஸ், மிச்செல் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன் - பதவியேற்பு நாளன்று ஒரே வண்ண ஷேடுகளில் உடையணிந்தது ஏன்?

Kamala Harris Michelle Obama wore purple shades இதுபோல் நிறங்களை வேண்டுமென்றே அவர்கள் தேர்வு செய்ததாகக் கூறப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Kamala Harris Michelle Obama wore purple dress Tamil News

Kamala Harris Michelle Obama wore purple dress

Kamala Harris, Michelle Obama wearing same shades of Dress Tamil News : வரலாற்றுச் சிறப்புமிக்க ஜோ பைடன் - கமலா ஹாரிஸ் பதவியேற்பு தினத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அவர்களில் அமெரிக்காவின் முன்னாள் முதல் குடிபெண்களான மிச்செல் ஒபாமா மற்றும் ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Advertisment

தன்னுடைய ஃபேஷன் தேர்வுகளுடன் அரசியல் அறிக்கைகளை வெளியிடுவதில் பெயர் பெற்ற மிச்செல், மீண்டும் ஒருமுறை அனைவரையும் வியப்புக்குள்ளாக்கினார். பிளம் நிற ஃப்ளோர் நீள கோட், கழுத்து  நீண்டிருக்கும் டர்டில் நெக் ஸ்வெட்டர் மற்றும் வைட்-லெக் பேன்டஸ் உள்ளிட்டவற்றை அணிந்து மிடுக்கானது தோற்றத்தில் இருந்தார். இந்த அழகான ஆடையைத் தங்க நிற பெல்ட், கருப்பு லெதர் கையுறைகள் மற்றும் பிளைன் கருப்பு முகமூடியுடன் மெருகேற்றினார். இந்த உடையை வடிவமைத்தவர் செர்ஜியோ ஹட்சன். இவர், கமலா ஹாரிஸின் உடையை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Kamala Harris Michelle Obama wore purple dress Tamil News Kamala Harris Michelle Obama wore purple dress Tamil News

ஹிலாரி கிளிண்டன், ஓர் ஊதா நிற பான்ட்சூட் மற்றும் ரஃபிள் டாப் அணிந்திருந்தார். அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், கிறிஸ்டோபர் ஜான் ரோஜர்ஸ் வடிவமைப்பிலான ஊதா ஃப்ராக் மற்றும் ஜாக்கெட்டை தேர்வு செய்தார்.

இப்படி மாறுபட்ட ஊதா நிற ஷேடுகளை அணிந்த மூன்று பெண்களும் வெறும் தற்செயலாக அணியவில்லை. நிபுணர்களின் கூற்றுப்படி, அரசியல் கட்சி வண்ணங்களின் சிவப்பு மற்றும் நீல நிறங்களின் நேரடி கலவையைக் காட்டுகிறது. அதனால், இதுபோல் நிறங்களை வேண்டுமென்றே அவர்கள் தேர்வு செய்ததாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக ஹாரிஸைப் பொறுத்தவரை, வண்ணம் இன்னும் சிறப்புப் பொருளைக் கொண்டுள்ளது. ஷெர்லி சிஷோலை கவுரவிப்பதற்காக 2019-ம் ஆண்டில் ஜனாதிபதி பதவிக்கான தனது பிரச்சாரத்தின்போது அவர் இதே நிற சாயல் அணிந்ததாகக் கூறப்படுகிறது. அவர் அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட முதல் கறுப்பினப் பெண். மேலும், இவர் வரலாற்றுப் பிரச்சாரத்தின் போது அடிக்கடி ஊதா நிறத்தை அணிந்திருக்கிறார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"

Kamala Harris Michelle Obama
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment