kambu recipe in tamil: பொதுவாக நாம் அன்றாட உண்ணும் அரிசி சாதத்தை விட தானியங்களில் அதிக அளவு சத்துக்கள் நிரம்பி காணப்படுகின்றன. அந்த வகையில் அரிசியைக் காட்டிலும், கனிமம், கால்சியம், புரதம், இரும்பு என அனைத்துச் சத்துக்களுமே அதிகம்கொண்ட ஒரு தானியமாக கம்பு உள்ளது. இது வளரும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் தொடங்கிய பெண் குழந்தைகளுக்கும் கண்டிப்பாகத் தரவேண்டிய தானியம் ஆகும்.
Advertisment
இந்த அற்புதமான தானியத்தை கூழ் செய்து பருகி வந்தால் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இப்படிப்பட்ட கம்பு தானியத்தில் எப்படி களி செய்து ருசிக்கலாம் என்பதற்கான எளிய செய்முறையை இங்கு வழங்கியுள்ளோம்.
கம்பங்களி செய்யத் தேவையான பொருட்கள்:-
கம்பு - 1 கப்
உப்பு - தேவையான அளவு
கம்பங்களி செய்முறை:-
கம்பைச் சுத்தம் செய்து ஒரு மிக்ஸியில் போட்டுக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். பிறகு அடி கனமாக உள்ள ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
தண்ணீர் நன்றாகக் கொதித்ததும் கம்பு மாவைச் சேர்த்துக் கட்டிதட்டாமல் கிளறி விடவும். பிறகு அவை நன்றாக வெந்ததும் இறக்கிவைத்துப் பரிமாறி ரசிக்கவும்.
இவற்றை அபப்டியே உருண்டைகளாகப் பிடித்தும் சாப்பிட்டு வரலாம். தவிர வெந்தயக் குழம்பு அல்லது கறிக்குழம்பு ஆகியவற்றோடு சேர்த்து ருசித்தால் அல்டிமேட்டாக இருக்கும்.