Advertisment

ஒளிக்கீற்று போல் மின்னும் கனகாம்பர மலர்: தென்னிந்தியாவின் பண்டிகைகளில் பெரும்பங்காற்றும் கனகாம்பரம்

தென்னிந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் நம் கலாசாரத்தில் மலர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, கனகாம்பரம் மலர் நம் பாரம்பரியத்தின் ஒரு அங்கமாக இருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Peach flower

பருவமழை நாள்களில் வட இந்திய சாலைகளில் மல்லிகை பூவினால் கட்டப்பட்ட மாலைகளை வியாபாரிகள் விற்பனை செய்த வண்ணம் செல்கின்றனர். மற்றொருபுறம் தென்னிந்திய வியாபாரிகள், மல்லிகையுடன் சேர்த்து கனகாம்பர மலர்களை மாலையாக உருவாக்கி விற்பனை செய்கின்றனர். இதில் கனகாம்பரத்தின் ஆரஞ்சு நிறம் சாதாரண மாலையைக் கூட சிறப்பு வாய்ந்ததாக மாற்றுகிறது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: A ray of gold: how kanakambaram lights up festivities and bridal decor in south india

கனகாம்பரம் என்கிற வார்த்தை சமஸ்கிருத மொழியில் இருந்து உருவானதாக கூறப்படுகிறது. சமஸ்கிருதத்தில் ‘கனக்’ என்றால் தங்கம் என்றும், ‘ஆம்பரம்’ என்றால் ஒளிக்கீற்று என்றும் பொருள்படுகிறது. மகாராஷ்டிரா மற்றும் கோவாவில் கனகாம்பரத்தை ‘அபோலி’ என அழைக்கின்றனர். இதன் இளஞ்சிவப்பு நிறத்தினால், கனேர் மலர் என்றும் சிலர் தவறாக புரிந்து கொள்கின்றனர்.

வட இந்தியாவில் மஞ்சள் நிறத்தில் காணப்படும் இந்த வகை மலர்களை ‘பிரியதர்ஷினி’ என அழைக்கின்றனர். உலகில் சில பகுதிகளில் கனகாம்பரம் போன்ற மலர்கள் ’ஆரஞ்சு மர்மலேட்’ என்று கூறப்படுகிறது. 
 
அமல்தாஸ் போன்ற கண்ணைக் கவரும் வண்ணம் கொண்ட மலர்கள் பெரும்பாலும் ஏப்ரல் மற்றும் மே மாதம் கொண்டாடப்படும் விழாக்களை அலங்கரிக்கின்றன. தென்னிந்தியாவைப் பொறுத்தவரை ஆரஞ்சு, இளஞ்சிவப்பு உடைய கனகாம்பரம் அதிகளவில் காணப்படுகிறது.

கோயில்கள் அதிகமாக காணப்படும் காஞ்சிபுரம் பகுதிகளில் கனகாம்பர மலர்களின் அழகை நாம் நுட்பமாக கண்டு ரசிக்க முடியும். குறிப்பாக, விஷ்ணு கோயில்கள் அருகே அதிகாலை நேரத்தில் கனகாம்பரம் மலர்கள் விற்கப்படுகின்றன. பல பெண்கள் கனகாம்பரம் கொண்ட கட்டப்பட்ட மாலைகளை அழக்குகாக வைத்திருக்கின்றனர்.

மல்லிகை, ரோஜா, தாமரை மற்றும் கனகாம்பரத்தைக் கொண்டு வியாபாரிகள் மிக அழகாக மாலைகள் உருவாக்குகின்றனர். இவற்றில் துளசி இலைகளும் சேர்த்து கட்டப்படுகிறது. இவை பெரும்பாலும் கோயில்களில் நடைபெறும் பூஜைகளுக்கு அர்பணிக்கப்படுகின்றன. மற்றொரு புறம், மல்லிகை மற்றும் கனகாம்பரத்தைக் கொண்டு கட்டப்பட்ட மாலைகளை பெண்கள் அணிகின்றனர்.

கண்போரைக் கவரும் அழகில் இருக்கும் கனகாம்பரம் அதிகளவில் திருமணங்களில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, நடிகை ஷோபிதா துலிபாலா தனது திருமண நாளின் போது கனகாம்பர மாலை அணிந்து இருந்தது, அவரது அழகிற்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் அமைந்தது.

தென்னிந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் தோட்டக்கலை மற்றும் மலர் வளர்ப்பு பெரும் பங்கு வகிக்கிறது. திருமணம் மற்றும் பண்டிகை நாள்களில் கனகாம்பரத்தின் விலை அதிகமாகக் காணப்படும். சராசரியாக ஒரு கிலோ கனகாம்பரத்தின் விலை ரூ. 1000 முதல் ரூ. 1200 வரை விற்பனையாகும். அதிலும், பெங்களூருவில் கொண்டாடப்படும் வரமகாலட்சுமி பண்டிகையின் போது ஒரு கிலோ கனகாம்பரம் ரூ. 3000-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

விவசாயிகளின் நலனை கருத்திற் கொண்டு, பல காலநிலை சூழல்களில் கனகாம்பரத்தை விளைவித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கோவாவில், கனகாம்பரத்தின் ஒரு வகையான அபோலி பூ, மாநில மலராக உள்ளது. 

கனகாம்பரத்தைப் போல் செயற்கை பூக்கள் அலங்காரத்திற்காக பயன்படுத்தப்பட்டாலும், இதன் தனித்துவத்திற்காக கனகாம்பரத்தையே பலரும் விரும்புகின்றனர் என்பதே நிதர்சனம்.

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Lifestyle Art And Culture
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment