Advertisment

ஆக சிறந்த காலை உணவு காஞ்சிபுரம் ஸ்பெஷல் இட்லி!

Kanchipuram idli recipe: காஞ்சிபுரம் இட்லியின் சுவைக்கு எதுவும் ஈடாகாது. காஞ்சிபுரம் கோவிலில் பிரசாதமாக வழங்கும் இந்த இட்லிக்கு அங்குள்ள மக்கள் அடிமை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஆக சிறந்த காலை உணவு காஞ்சிபுரம் ஸ்பெஷல் இட்லி!

Kanchipuram idli recipe, kanchipuram idli video: தென்னிந்தாவின் காலை உணவுகளில் தவறாமல் இடம் பெறும் ஒரு உணவுப் பொருள் என்னவென்றால் அது இட்லி தான். காலை , மாலை, இரவு என மூன்று வேளையும் இட்லி பரிமாறினாலும் முகம் சுளிக்காமல் கேட்டு வாங்கி சாப்பிடும் ஆட்கள் நம் ஊரில் அதிகம்.

Advertisment

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும், மாவட்டத்திலும் இட்லியை பல விதமாக சமைப்பார்கள்.ஏன் மருத்துவர்கள் காலை உணவாக குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கும் பரிந்துரைப்பது இந்த இட்லியை தான்.

காஞ்சிபுரம் இட்லியின் சுவைக்கு எதுவும் ஈடாகாது என்பது உண்டவர்களுக்கு மட்டுமே தெரியும். காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலில் பிரசாதமாக வழங்கும் இந்த இட்லிக்கு அங்குள்ள மக்கள் அடிமை. பகவானின் பிரசாதம் சாப்பிட்ட மாதிரியும் இருக்கும், காலையில் டிப்பன் செய்யுற வேலையும் மிச்சம்னு கோவில சுத்தி இருக்குற பெண்கள் சிலர் காலையில் சமைக்கவே மாட்டார்கள்.

இந்த காஞ்சிபுரம் இட்லியை செய்ய முதலில் மாவை புளிக்க வைக்க வேண்டுமாம். அப்பத்தான் அந்த டேஸ்டே வருமாம். இனியும் தாமதிக்காம காஞ்சிபுரம் இட்லி எப்படி செய்யலாம்னு பார்க்கலாமா….

Kanchipuram idly in tamil, kanchipuram idly recipe: காஞ்சிபுரம் ஸ்பெஷல் இட்லி:

செய்முறை:

1.பச்சரிசி- 1 கப்

2. புழுங்கலரிசி -1 கப்

3.உளுத்தம் பருப்பு -1 கப்

4.புளித்த தயிர்- 1 கப்

5.மிளகு -1 ஸ்பூன்

6.சீரகம் -ஸ்பூன்

7.பெருங்காயத்தூள் -1/2 ஸ்பூன் சிறிதளவு

8.நெய் 2 ஸ்பூன்

9.கறிவேப்பிலை

10.உப்பு

1. முதலில் அரிசியையும், ரவையும் மாவை போல் அரைப்பதற்கு 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

2.பின்பு, அதில் உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து 8 மணி நேரம் புளித்து போக விடவும்.

3.அதன் பின்னர், குவளை போன்ற பாத்திரம் அல்லது அலுமினிய இட்லி தட்டில் வாழை இலையை வைத்து அதன் மேல் நெய்யை தடவ வேண்டும்.

4.பின்பு, மாவில் மிளகு, சீரகம், தயிர், நெய், கறிவேப்பிலை, இஞ்சி, சேர்த்து நன்கு கலந்து தட்டில் ஊற்ற வேண்டும்.

5.பின்பு, பாத்திரத்தை மூடி 15 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.

சுவையான காஞ்சிபுரம் இட்லி ரெடி.

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment