பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தற்போது முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்து வருகிறார். ‘தலைவி’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார்.
தலைவி திரைப்படம் முன்னதாக ஜூன் மாதம் திரைக்கு வருவதாக இருந்தது. இருப்பினும், கொரோனா பெருந்தொற்று காரணமாக படப்பிடிப்பு பணிகள் தாமதமாகின. இந்நிலையில், நடன ஒத்திகை (டான்ஸ் ரிகர்சல்) பணிகள் தற்போது துடங்கியுள்ளன.
இதுகுறித்து உதவி நடன இயக்குனர் பிரசன்னா பாபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ” இறுதியாக பணிக்கு திரும்பியுள்ளோம்! ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவி படத்தின் டான்ஸ் ரிகர்சல் தொடங்கின. மிகவும் எளிமையான நடிகை கங்கனரனாத் அவர்களோடு ஒரு அற்புதமான ஒத்திகை பணிகள் நடைபெறுகிறது. படத்தின் பாடலுக்கான நடனத்தை எங்களது மாஸ்டர் பிரிந்தா இயக்குகிறார். ஏற்கனவே, மணிகர்னிகா படத்தில் உங்களுடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது, இப்போது தலைவி திரைப்படத்தில் மீண்டும் உங்களுடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் ” என்று பதிவு செய்தார்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை விஷ்ணு இந்தூரி, ஷைலேஷ் ஆர் சிங் தயாரிக்கிறார்கள். தலைவியின் ஒளிப்பதிவாளர் விஷால் விட்டல், கே வி விஜயேந்திர பிரசாத், விஜய்யுடன் இணைந்து இதற்கான ஸ்கிரிப்ட்டை எழுதியுள்ளார். முன்னதாக, படத்தில் எம்.ஜி.ஆராக நடிக்கும் அரவிந்த்சாமியின் தோற்றம் வெளியாகி வைரலானது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil