Advertisment

சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா 2025! புதிய திறமையாளர்களுக்கு கனிமொழி எம்.பி அழைப்பு

பறையாட்டம் முதல் இலக்கிய திருவிழா வரை; சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவில் கலந்துக் கொள்ள புதிய திறமையாளர்களுக்கு வாய்ப்பு; கனிமொழி எம்.பி அழைப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai Sangamam to be arranged, chennai sangamam festival, சென்னை சங்கமம், பொங்கல் பண்டிகை, திமுக, கனிமொழி, முதல்வர் முக ஸ்டாலின், நாட்டுப்புற கலை விழா, chennai sangamam restarted for CM MK Stalin maiden Pongal, pongal festival, dmk, dmk mp kanimozhi, kanimozhi

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை சிறப்பிக்கும் விதமாக சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா 2025 நிகழ்ச்சியில் தங்கள் திறமைகளை அரங்கேற்றச் செய்ய புதிய திறமையாளர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு என தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisment

இதில், சென்னை தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியில், நவம்பர் 30, டிசம்பர் 1, 7, 8 தேதிகளில் மண்சார் பாடகர்கள், கர்நாடக இசைப் பாடகர்கள், கிராமிய இசைக்கலைஞர்கள், தாள வாத்தியக் கலைஞர்கள், கிராமிய நடனக் கலைஞர்கள் ஆகிய பிரிவுகளில் தேர்வு நடைபெறவுள்ளது. 15 வயதிற்கு மேற்பட்டவர்கள் பங்கேற்கலாம். முன்பதிவு செய்யத் தொலைப்பேசி எண்ணும் 9841048624 கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு மற்றும் கனிமொழி கருணாநிதி எம்.பி முன்னெடுப்பில் சென்னையில் சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் கலை நிகழ்ச்சிகள் தைத் திங்கள் பொங்கல் விழாவினையொட்டி நடைபெறுவது வழக்கம். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 1000க்கும் மேற்பட்ட கிராமியக் கலைஞர்கள் இணைந்து சென்னையில் மாநகராட்சி விளையாட்டுத்திடல் மற்றும் பூங்கா உள்ளிட்ட பல இடங்களில் நிகழ்ச்சி நடைபெறும். 
தி.மு.க துணை பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி கருணாநிதி முன்னெடுப்பில், கடந்த 2007ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சிக் காலத்தில் கலைஞரால் தொடங்கி வைக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான கலைஞர்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கான நிகழ்ச்சிகளைக் கனிமொழி ஒருங்கிணைத்து நடத்தி வந்தார். அரசு சார்பில் ‘சென்னை சங்கமம்’ (Chennai Sangamam) என்ற பெயரில் கலை பண்பாட்டுத் திருவிழாவைச் சென்னையில் ஒருங்கிணைத்து நடத்தி வந்தார். இந்நிலையில், 2011-ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், 10 வருடங்களாக ‘சென்னை சங்கமம் நிகழ்ச்சி முடக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கடந்து 2021 நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பின்பு, 2022-ல் இருந்து சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகரின் பல இடங்களில் நான்கு நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் பறையாட்டம், கரகாட்டம், நையாண்டி மேளம், சிலம்பாட்டம், கும்மியாட்டம், ஜிக்காட்டம், மலைவாழ் மக்களின் கலைகள், இலக்கியத் திருவிழா உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மற்றும் உணவுத் திருவிழா என களைக்கட்ட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Kanimozhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment