"நம்ம தூத்துக்குடி மகிழ்வகம், மகளிர் நம்பிக்கையின் உறைவிடம்" திறப்பு விழா தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (டிச 23) நடைபெற்றது. இதனை தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி திறந்து வைத்தார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி துறையின் மூலம் இந்த மகிழ்வகத்திற்கு கட்டடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கனிமொழி எம்.பி-யின் முன்னெடுப்பில் நம்ம தூத்துக்குடி மகிழ்வகம் என்ற மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான 20 படுக்கைகள் கொண்ட இந்த காப்பகம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், திறன் பயிற்சி மையத்தையும் கனிமொழி திறந்து வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற விழாவில் அவர் உரையாற்றினார். அப்போது, "நம்ம தூத்துக்குடியில் மகிழ்வகம், மகளிர் நம்பிக்கையின் உறைவிடம் என்ற இந்த திட்டத்தின் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
பான்யன் கார்டன் மற்றும் சோயா தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து தூத்துக்குடியில் மகிழ்வகம் உருவாக்கியிருக்கிறோம். இந்த நிறுவனத்திற்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் பல இடங்களில் அலைந்து கொண்டு இருப்பதை நாம் பார்க்கிறோம். நம் மனம் அந்த ஒரு நிமிடம் அவர்களுக்காக வருத்தப்படுகிறது. ஆனால், அதன் பின்னர் கடந்து சென்று விடுவோம்.
அவர்களுக்கு உதவி செய்வதற்காக, தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட நிறுவனம் தான் பான்யன். இந்தியாவில் பல மாநிலங்களில் மனநிலை ஆரோக்கிய கொள்கைகளை (Mental Health Policy) பான்யன் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
ஒரு காலகட்டத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்றால் ஒரு அறையில் அடைத்து வைத்து இருப்பார்கள், காலில் சங்கிலி கட்டி இருப்பார்கள். அவர்கள் குறித்து பல சோகமான நிலையைக் கேள்விப்பட்டிருக்கின்றோம். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
கலைஞரின் வழியில் நம்முடைய முதலமைச்சர் அவர்களும் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து மக்களுக்கான மிகப்பெரிய சேவைகளையும், திட்டங்களையும் உருவாக்கித் தந்திருக்கிறார்.
இந்த உலகத்தில் மக்கள் இடையே இருக்கக்கூடிய பாகுபாடுகள், இந்தியாவில் உள்ள ஜாதி வேறுபாடுகள் மற்றும் ஆண், பெண் என்ற ஏற்றத்தாழ்வுகள் என அத்தனையும் மனநிலையைப் பாதிக்கக்கூடிய விஷயங்களாக மாறிக்கொண்டிருக்கிறது" எனக் கூறினார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநர் இரா. ஐஸ்வா்யா, மருத்துவக் கல்லூரியின் முதல்வர் சிவகுமார், பான்யன் இயக்குநர் கீர்த்தனா ராஜகோபால் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
செய்தி - க. சண்முகவடிவேல்
"நம்ம தூத்துக்குடி மகிழ்வகம், மகளிர் நம்பிக்கையின் உறைவிடம்" திறப்பு விழா தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (டிச 23) நடைபெற்றது. இதனை தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி திறந்து வைத்தார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி துறையின் மூலம் இந்த மகிழ்வகத்திற்கு கட்டடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கனிமொழி எம்.பி-யின் முன்னெடுப்பில் நம்ம தூத்துக்குடி மகிழ்வகம் என்ற மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான 20 படுக்கைகள் கொண்ட இந்த காப்பகம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், திறன் பயிற்சி மையத்தையும் கனிமொழி திறந்து வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற விழாவில் அவர் உரையாற்றினார். அப்போது, "நம்ம தூத்துக்குடியில் மகிழ்வகம், மகளிர் நம்பிக்கையின் உறைவிடம் என்ற இந்த திட்டத்தின் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
பானியன் கார்டன் மற்றும் சோயா தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து தூத்துக்குடியில் மகிழ்வகம் உருவாக்கியிருக்கிறோம். இந்த நிறுவனத்திற்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் பல இடங்களில் அலைந்து கொண்டு இருப்பதை நாம் பார்க்கிறோம். நம் மனம் அந்த ஒரு நிமிடம் அவர்களுக்காக வருத்தப்படுகிறது. ஆனால், அதன் பின்னர் கடந்து சென்று விடுவோம்.
அவர்களுக்கு உதவி செய்வதற்காக, தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட நிறுவனம் தான் பான்யன். இந்தியாவில் பல மாநிலங்களில் மனநிலை ஆரோக்கிய கொள்கைகளை (Mental Health Policy) பான்யன் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
ஒரு காலகட்டத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்றால் ஒரு அறையில் அடைத்து வைத்து இருப்பார்கள், காலில் சங்கிலி கட்டி இருப்பார்கள். அவர்கள் குறித்து பல சோகமான நிலையைக் கேள்விப்பட்டிருக்கின்றோம். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
கலைஞரின் வழியில் நம்முடைய முதலமைச்சர் அவர்களும் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து மக்களுக்கான மிகப்பெரிய சேவைகளையும், திட்டங்களையும் உருவாக்கித் தந்திருக்கிறார்.
இந்த உலகத்தில் மக்கள் இடையே இருக்கக்கூடிய பாகுபாடுகள், இந்தியாவில் உள்ள ஜாதி வேறுபாடுகள் மற்றும் ஆண், பெண் என்ற ஏற்றத்தாழ்வுகள் என அத்தனையும் மனநிலையைப் பாதிக்கக்கூடிய விஷயங்களாக மாறிக்கொண்டிருக்கிறது" எனக் கூறினார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநர் இரா. ஐஸ்வா்யா, மருத்துவக் கல்லூரியின் முதல்வர் சிவகுமார், பான்யன் இயக்குநர் கீர்த்தனா ராஜகோபால் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
செய்தி - க. சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.