ஒரு முறை காஞ்சிபுரம் இட்லி இப்படி செய்யுங்க. செம்ம சுவையாக இருக்கும்
தேவையான பொருட்கள்
1 கப் இட்லி அரிசி
1 கப் பச்சரிசி
1 கப் உளுந்து
1 டேபிள் ஸ்பூன் வெந்தயம்
உப்பு
1 கரண்டி நல்லெண்ணை
கால் ஸ்பூன் கடுகு
காப் ஸ்பூன் கடலை பருப்பு
கால் ஸ்பூன் உடைச்ச முந்திரி பருப்பு
கால் ஸ்பூன் மிளகு
கால் ஸ்பூன் சீரகம்
கால் ஸ்பூன் பெருங்காயம்
செய்முறை : இட்லி அரிசி, உளுந்து, பச்சரிசி, வெந்தயத்தை நன்றாக கழுவி 4 மணி நேரம் ஊற வைக்கவும். முதலில் உளுந்தை நன்றாக அரைக்க வேண்டும். தொடர்ந்து அரிசியை கொரகொரப்பாக அரைக்க வேண்டும். இதை 9 மணி நேரம் புளிக்க வைக்கவும். தொடர்ந்து புளித்த மாவில் எண்ணெய் சூடாக்கி கடுகு, கடலை பருப்பு, முந்திரி, மிளகு, சீரகம், பெருங்காயம் சேர்த்து கிளரவும். தொடர்ந்து வாழை இளையை கோன் போல கட்டி அதில் மாவை ஊற்றவும். இட்லி பாத்திரத்தில் வேக வைத்து எடுக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“