பிரபல சீரியல் நடிகை கண்மனி மனோகரன் இன்ஸ்டாகிராமிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். இன்ஸ்டாவில் மட்டும் கிட்டத்தட்ட 7 லட்சத்துக்கும் அதிகமானோர் அவரை ஃபாலோ செய்கின்றனர். அதில் அடிக்கடி தன்னுடைய போட்டோஷூட் படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.
கண்மனி, இப்போது கேரள மாநிலம், ஆலப்புழாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு, படகில் சுற்றிப் பார்த்த போது எடுத்த படங்களை கண்மனி தன் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
கடவுளின் சொந்த தேசம்
கேரளா ஏன் கடவுளின் சொந்த தேசம் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? மழைக் காலத்தில் கேரளாவுக்குச் சென்றால் உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும். கேரளாவில் பருவமழை நிச்சயமாக ஒரு வாழ்நாள் அனுபவம்.
இந்த அழகான கண்கவர் மாநிலம், மழையின் போது இன்னும் சிறப்பாக மாறும். மண் மணம், நிரம்பி வழியும் ஆறுகள், பச்சைபசேல் இலைகள், உங்கள் முகத்தில் வீசும் குளிர்ந்த காற்று ஆகியவற்றை நீங்கள் உணர்வீர்கள்.
கேரளாவில் இரண்டு பருவமழை சீசன் உள்ளது. இதில், தென்மேற்கு பருவமழை ஜூன் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். அந்த சமயத்தில் மாநிலத்தின் சராசரி வெப்பநிலை 19 முதல் 30 டிகிரி வரையில் இதமான ஒரு காலநிலையை நீங்கள் அனுபவிக்கலாம்.
ஆலப்புழா படகு வீடு
ஆலப்புழா மற்றும் குமரக்கோம் இவை இரண்டும் பேக் வாட்டர் மற்றும் படகு சவாரிக்கு மிகப் புகழ் பெற்றது.
ஒரு பயணம் கண்களுக்கும், மனதுக்கும் விருந்தாக அமைந்தால் எப்படி இருக்கும் அதுபோலதான் ஆலப்புழா படகு வீடு பயணம். தண்ணீர்மீது தங்கும் அந்த அழகிய அனுபவம் வித்தியாசமான சூழலுக்குக் கடத்திச் செல்கிறது. இந்தப் படகு வீட்டை இரு ஆட்கள் கவனித்துக் கொள்வார்கள். அவர்களே சமையலும் செய்து கொடுப்பார்கள்.
இப்படிப் பயணிக்கும்போது படகோட்டிகள் மாலை ஆறு மணிக்குப் படகை ஓர் இடத்தில நிறுத்தி விடுவார்கள். பின்னர் மறுநாள் காலை ஒன்பது மணிக்குத்தான் பயணம் தொடரும்.
பின்னர் அங்கிருக்கும் சிறு கிராமங்களுக்குச் சென்று சுற்றுலாப் பயணிகள் தங்களுக்கு வேண்டிய நினைவு பொருள்களை வாங்கி வரலாம்.
நீங்க அடுத்தமுறை கேரளாவுக்கு போனா, இந்த ஆலப்புழா படகு வீடு பயணத்தை அனுபவிக்க மறக்காதீங்க!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“