அவர்களுக்கெல்லாம் என்னுடைய பதில் ‘சைலன்ஸ்’ – கண்ணான கண்ணே அக்ஷிதா பெர்சனல்ஸ்

Kannana Kanne Serial Actress Akshitha Personal Lifestyle ஒர்க் அவுட் செய்த பிறகு கேரட் ஜூஸ் குடிப்பேன். இதை எல்லாவற்றையும் விட மிக முக்கியமான விஷயம், தண்ணீர்.

Kannana Kanne Serial Actress Akshitha Personal Lifestyle Tamil News
Kannana Kanne Serial Actress Akshitha Personal Lifestyle Tamil News

Kannana Kanne Serial Actress Akshitha Personal Lifestyle Tamil News : ‘நீங்க நல்லவரா கெட்டவரா’ என்கிற ரேஞ்சில் கண்ணான கண்ணே தொடரில் ஒரு கதாபாத்திரம். அதனை மிகவும் சவாலாக ஏற்று நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் அக்ஷிதா. கன்னட திரையுலகில் 5 திரைப்படங்கள் நடித்திருக்கும் இவர், சின்னதிரையிலும் இளவரசியாக வலம்வந்துகொண்டிருக்கிறார். தன்னுடைய எளிமையான பியூட்டி சீக்ரெட்டுகளை சமீபத்தில் பகிர்ந்துகொண்டார்.

“சென்னையில் வெயில் அதிகம் என்பதால் நம் உடலைக் குளிர்ந்த நிலையில் வைத்துக்கொள்வது அவசியம். அந்த வரிசையில், என் அம்மா எனக்காக ஒரு ஸ்பெஷல் எண்ணெய்யைத் தயார் செய்வார். கறிவேப்பிலை, செம்பருத்தி, கடுகு ஆகியவற்றைத் தேங்காய் எண்ணெய்யில் சேர்த்து சுடவைத்து தலைக்கு மசாஜ் செய்து குளித்தால் நிச்சயம் உடலும் குளிர்ந்த நிலைக்கு செல்லும். தலைமுடியும் வலுவாகும்.

அதேபோல, இரவில் சிறிதளவு வெந்தயம் ஊறவைத்து, காலையில் அதில் கொஞ்சம் தயிர் சேர்த்து அரைத்து தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம். இதுவும் உடலுக்கு மிகவும் நல்லது. இரவில் முகத்திற்குக் கற்றாழை ஜெல் அப்லை செய்வது என் வழக்கம். கடைகளில் விற்கும் பச்சை நிற ஜெல் ஒரிஜினல் அல்ல. வெள்ளை நிறத்தில் இருப்பதுதான் உண்மையான ஜெல். எனவே உண்மையான ஜெல் எது என்பதைப் பார்த்து வாங்கி பயன்படுத்துங்கள்.

பளபளப்பான சருமத்திற்குப் பழங்கள் மற்றும் காய்கறிகள் நல்லது. அந்த வரிசையில் வெள்ளரி நான் நிறைய சாப்பிடுவேன். மாம்பழம் பிடிக்கும். ஆனால் எப்போதாவது ரொம்ப ஆசையாக இருந்தால் மட்டுமே சாப்பிடுவேன். ஒர்க் அவுட் செய்த பிறகு கேரட் ஜூஸ் குடிப்பேன். இதை எல்லாவற்றையும் விட மிக முக்கியமான விஷயம், தண்ணீர். எப்போதுமே தண்ணீர் குடித்துக்கொண்டே இருப்பேன். ஷூட்டிங்கில் கூட ‘எப்போ பார்த்தாலும் வாஷ் ரூம் போறியே’ எனக் கேட்பார்கள். என்ன பண்ணுறது? அவ்வளவு தண்ணீர் குடிக்கிறேன்.

சாதாரணமாகவே எனக்கு மாடர்ன் ட்ரெஸ் மிகவும் பிடிக்கும். அதற்கேற்றது போல என் கதாபாத்திரங்கள் அமைவதால் எனக்கு ரொம்ப சந்தோஷம். இப்போது என்னுடைய ப்ரீத்தி கதாபாத்திரத்திற்கு ஏராளமான நெகட்டிவ் கமென்ட்டுகள் வருகின்றன. ஆனால், அதையெல்லாம் நான் பெரிதாக ஏற்றுக்கொள்வதில்லை. ‘சைலன்ட்’தான் என்னுடைய பதில்” என்று பகிர்ந்துகொண்டார் அக்ஷிதா.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Kannana kanne serial actress akshitha personal lifestyle tamil news

Next Story
இட்லி, தோசை ”போர்” அடிக்குதா? சுவையான ரவா கிச்சடி ஒரு நாள் ட்ரை பண்ணி பாருங்கKhichdi recipe in tamil: Hotel style rava khichadi in tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com