Kannana Kanne Serial Actress Nimeshika about her Father Tamil News : கண்ணான கண்ணே தொடரில், தன் அப்பாவின் அரவணைப்பிற்காக ஏங்கும் அப்பாவி பெண்ணான மீரா கதாபாத்திரத்தில் நடித்து, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலரின் அன்பைப் பெற்றிருக்கும் நிமிஷ்கா, உண்மையில் படுசுட்டி பெண். ஆனால், மீரா கதாபாத்திரம் அவருடைய உண்மையான வாழ்க்கையிலும் அமைதியான பெண்ணாக மாற்றி இருப்பதாக சமீபத்தில் பகிர்ந்துகொண்டார். மேலும், தன்னுடன் நடித்து வரும் மற்ற நடிகர்களைப் பற்றியும் பகிர்ந்துகொண்டார்.

“குழந்தைகள், பெற்றோர்கள், வயதானவர்கள் எனப் பெரும்பாலானவர்களுக்கு மீரா கதாபாத்திரம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எப்போதும் ஏதாவது பேசிக்கொண்டே இருந்த என்னை அமைதியாக மாற்றி இருக்கிறது இந்த கதாபாத்திரம். என்னுடன் நடிக்கும் சக கலைஞர்களும் மிகவும் நல்ல மனிதர்கள். ஸ்க்ரீனில் தோன்றும் ஸ்ட்ரிக்ட் அப்பா கிடையாது பப்ளு. பார்ப்பதற்கு ஹல்க் போலத் தோன்றினாலும் அவர் மிகவும் ஸ்போர்ட்டிவ். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் மனிதர் அவர்.

அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் நித்யா தாஸ் அவங்களுக்குள்ள, இன்னும் ஏராளமான கதாபாத்திரங்கள் இருக்கிறார்கள். எல்லா வேலைகளையும் வேக வேகமாகச் செய்வார். இயக்குநர் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தாலும், இவர் யூனிட் ஆட்களை கூப்பிட்டு, ரெடி ரெடி என்று சத்தமிட்டுக்கொண்டிருப்பர். அதற்கு நேர மாறானவர் யுவா. எப்போதுமே சாந்தமாக அமைதியாக இருப்பார் யுவா. அவரிடம் சென்று எந்த விஷயம் எப்படி சொன்னாலும், எல்லாவற்றையும் பாசிட்டிவ்வாக பார்ப்பவர் அவர். முகத்தில் எப்போதும் புன்னகை இருந்துகொண்டே இருக்கும்.

தங்கை கதாபாத்திரத்தில் நடிக்கும் அக்ஷிதா வேற மாதிரி. மனதில் எதையும் வைத்துக்கொள்ள தெரியாது. திட்டுவது என்றாலும் கூட முதலில் திட்டிவிட்டு, பிறகு ஒரு புன்னகையோடு முடித்துவிடுவார். எந்த சூழ்நிலையையும் சிரித்துக்கொண்டே கையாளும் திறமை அக்ஷிதாவிற்கு உண்டு. ப்ரீத்தி சஞ்சீவ் எப்போதும் தான் உண்டு தன் வேலை என்று இருப்பார். தன்னுடைய ஷாட் முடித்ததும் அவருடைய அறைக்குச் சென்று ஓய்வெடுப்பர். எங்கள் எல்லோருடனும் அவர் பேசினால் நன்றாக இருக்கும்.

நான் எவ்வளவு பெரிய கவலையில் இருந்தாலும், என் நெருங்கிய தோழி நித்யாவுடன் இருந்த நாட்களை நினைத்துப் பார்த்துக்கொள்வேன். எனக்கே தெரியாமல், புன்னகைத்துக்கொண்டிருப்பேன். அதேபோல என்னுடைய மறைந்த அப்பாவிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆரா காயம். சிறு வயதில் எந்நேரமும் திட்டிக்கொண்டே இருக்கிறார் என்று அப்பாவைப் பார்த்தாலே விலகிச் சென்றுவிடுவேன். ஆனால், அவர் இறக்கும் தறுவாயில் அவருடன் நான் நெருங்கிப் பழகி ஆரம்பித்தேன்.

அப்போதுதான், நான் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டேன் என்று தெரிந்தது. அப்பாவைப் புரிந்துகொள்ளாமல் போய்விட்டேன் என்கிற மனக்குறை இன்றும் இருக்கிறது. நல்ல மகளாக இருந்திருக்கலாம்”.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil