டான்ஸர், மாடல், சினிமா டூ சீரியல் ஆக்டர்ஸ்.. கண்ணான கண்ணே ப்ரீத்தி லைஃப் ட்ராவல்!

SunTv Serial Actress: அக்ஷிதாவுக்கு மலையாளம், தெலுங்கு, கன்னடம், தமிழ் என பல மொழி நடிகையாக இருக்க வேண்டும் என்பது ஆசையாம்.

akshitha bopaih

சன்டிவியின் கண்ணான கண்ணே சீரியலில் பீரித்தியாக நடித்து வருபவர் அக்ஷிதா போபையா. கர்நாடகாவை சேர்ந்தவர். மைசூரில் கல்லூரி படிப்பை முடித்துள்ளார் .சிறு வயதில் இருந்தே நடிப்பு மீது அதிகம் ஆர்வம் இருந்ததால் மாடலிங் செய்து வந்துள்ளார். பிறகு 2017 ல் ‘ரியல் போலீஸ்’ என்கிற கன்னட படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ச்சியாக பல பட வாய்ப்புகள் கிடைத்தது. கன்னடத்தில் ‘அம்பி நிங் வயசைதோ’ , பி5, ஷிவார்ஜூனா போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இதில் ஷிவார்ஜூனா படம் நல்ல ஹிட் ஆனது.

படங்களில் நடித்துக்கொண்டிருந்தவர் கன்னட சின்னத்திரைக்குள் நுழைந்தார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கன்னட வெர்ஷன் வரலட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து பிரபலமானர். தமிழில் இவரது முதல் அறிமுகம் அழகு சீரியல்தான். நிவி என்கிற கதாபாத்திரத்தில் கல்லூரி மாணவியாக நடித்திருந்தார். சில மாதங்களிலேயே அவரது கேரக்டருக்கு நல்ல ரீச் கிடைத்தது. அடுத்தடுத்து சீரியல் வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. ஜீ தமிழின் ரெக்க கட்டி பறக்குது மனசு, விஜய்டிவியின் தாழம்பூ, லட்சுமி ஸ்டோர்ஸ் போன்ற சீரியல்களில் நடித்து தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடையே பாப்புலரானார்.

கலர்ஸ் சூப்பரில் ஒளிபரப்பான ஷாந்தம் பாப்பம் தொடரிலும் நடித்தார். அதன்பிறகு தான் கண்ணான கண்ணே தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்பாவின் செல்ல மகளாக அக்கா மீரா மீது பாசத்தை பொழியும் தங்கையாக நடித்து ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்துள்ளார். தொடக்கத்தில் தமிழ் தெரியாமல் நடிக்க வந்த இவர் சில மாதங்களிலேயே நல்ல தமிழ் கற்றுக்கொண்டார். பள்ளியில் படிக்கும்போதே அக்ஷிதாவுக்கு ஸ்போர்ட்ஸ் ரொம்ப பிடித்த ஒன்று. இவர் பரதநாட்டிய டான்ஸரும் கூட. முறைப்படி பரதநாட்டியம் கற்றுள்ளார். காலேஜ் படிக்கும்போது இவர் டாம்பாய் போல தான் டிரெஸ் பன்னுவாராம்.

அக்ஷிதாவுக்கு மலையாளம், தெலுங்கு, கன்னடம், தமிழ் என பல மொழி நடிகையாக இருக்க வேண்டும் என்பது ஆசையாம். அதுவும் மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் பெரிய நடிகர்களுடன் படம் நடிக்க வேண்டும் என்பது கனவு. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பீரித்தி சீரியல்களில் மாடனாக நடித்தாலும் இன்ஸ்டாவில் படு கிளாமராக புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை தெறிக்க விடுகிறார். கன்னடத்தில் சின்னத்திரையில் மிகச் சிறந்த இடத்தை கூடிய விரைவில் பிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் அக்ஷிதா போபையா.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Kannana kanne suntv preethi akshitha bopaiah biography

Next Story
அஜீரணம், சுகர்… உங்க கிச்சனில் இருக்கு உடனடித் தீர்வு!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com