Advertisment

3000 ஆண்டுக்கு முன் மூடப்பட்ட கதவுகள்... மீண்டும் திறக்கப்படும் குமரி பகவதி அம்மன் கோவில் தீர்த்த கிணறு

கன்னியாகுமரி தேவி பகவதியம்மன் கோவில் 3000 ஆண்டு பழமையான கிணற்றில் மன்னர் காலத்து செம்பு நாணயம் முதல் இன்றைய பயன்பாட்டில் இருக்கும் வரைய நாணயங்கள் குவிந்து கிடக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kanyakumari bhagavathy amman temple well to be open after 3000 years Tamil News

இந்தியாவின் தென் கோடி எல்லையில் கன்னி தெய்வம் கோவில் கொண்டதால் இந்த பகுதிக்கு கன்னியாகுமரி என பெயர் காரணம் வந்தது. பரசுராமன் வீசிய வீசிய கோடாலி விழுந்த பகுதியில் கடல் நீர் அகன்று நிலப்பரப்பு தோன்றியது என்கிற ஐதீகமும் உண்டு. மூன்று கடல்கள் சங்கமிக்கும் குமரிக் கடலில் பக்தர்கள் புனித நீராடுகிறார்கள். 

Advertisment

கன்னியாகுமரி கடற்கரையில் இருந்து 50 அடி தூரத்தில் பகவதி அம்மன் கோயில் உள்ளது. அதன் முதல் சுற்றுபிரகாரம் பகுதியில் மிகவும் பழமையான கிணற்றில் உப்பு தன்மை இல்லாத நல்ல தண்ணீர் இருக்கிறது. அந்த நீரில் தான் பகவதி அம்மனை அபிஷேகம் செய்ததோடு, கோவில் பிரசாதமும் அந்த நீரால் தான் செய்யப்பட்டுள்ளது. இது திருவிதாங்கூர் மன்னர் காலம் முதலே பயன்படுத்தப்பட்டுள்ளது.

குமரி பகவதி அம்மன் மூக்குத்தியில் ஒளிரும் வெளிச்சத்தை பார்த்து ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடந்த ஒன்று நிகழ்வு உள்ளது. அப்போது, கடலில் பயணித்த கப்பலின் தலைவன் பகவதியம்மன் மூக்குத்தியை கலங்கரை விளக்கு என நினைத்து கப்பலை ஒளி வந்த திசை நோக்கி செலுத்த ஆணையிட்டார். குமரிக்கரை நோக்கி பயணப்பட்ட கப்பல் கன்னியாகுமரிக்கு 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள லீபுரம் கடற்பாதை, மற்றும் மணலில் சிக்கி விபத்து அடைந்துள்ளது. 

இதன் காரணமாக, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் கிழக்கு வாசல் நிறந்தரமாக மூடப்பட்டு, வடக்கு வாசல் திறந்ததும், இன்று வரை வடக்கு வாசல் வழியாக தான் மக்கள் கோவிலின் உள்ளே சென்று வருகிறார்கள். லீபுரம் கடலில் இன்றும் மூழ்கிய கப்பலின் பாகங்கள் கிடப்பதை காணலாம். கப்பலில் புகை போக்கியை கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா தேவாலயத்தின் கொடிகம்பமாக இன்றும் பயன்பாட்டில் உள்ளது. 

திருவிதாங்கூர் மன்னர், மற்றும் பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலத்தில். கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலுக்கு கோபுரம் கட்ட முயன்று செயல் படுத்த முடியாது தடை ஏற்பட்டது. 

குமரி மாவட்ட இன்றைய அறங்காவலர் குழுவின் தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மற்றும் குழுவினர் முயற்சியில் கோபுரம் சம்பந்தப்பட்ட முயற்சி அதற்கான நிதி திரட்டல் என்ற பணி நடந்துக்கொண்டிருக்கும் நிலையில், பகவதி அம்மன் கோயில் பிரகாரத்தில் உள்ள பல நூற்றாண்டுகளாக பயன் படுத்தாமல் இருக்கும் கிணற்றின் மேல் பகுதி இரும்பு வளையத்தால் மூடப்பட்டே பல ஆண்டுகள் கடந்து விட்டது. 

கோபுரம் வேலைகள் சம்பந்தமான ஆய்வில் அறங்காவலர் குழு மற்றும் கோவில் மேலாளர் ஆனந்த் உட்பட்டோர் பல நூறு ஆண்டுகளான கிணறு பயன்பாட்டில் இல்லாது மூடிய நிலையில் இருந்தாலும், தினந்தோறும் கோவிலுக்கு வரும் பக்தர்கள், கோயில் உண்டியலில் காணிக்கை  செலுத்த பல ஆண்டுகளாக குறிபிட்ட கிணற்றிலும் நாணயம்,வெள்ளி, தங்கம் பகவதி அம்மனுக்கு காணிக்கை செலுத்தி வருகிறார்கள். 

தற்போதைய மேல் சாந்தி இந்த கிணறு பயன்பாட்டில் இல்லாமல் 1000 ஆம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் இருந்த மேல் சாந்திகள் பலர் குறிபிட்ட கிணற்றின் தண்ணிரை எடுக்க படிக்கட்டுகள் வழியாக சென்ற அதி காலை நேரத்தில், கிணற்றின் மேல் பகுதியில் பணியாளர்கள் தீ வெட்டியை பிடித்து நிற்பார்கள் அந்த வெளிச்சத்தில் திருக்கிணற்றினுள் சென்று அம்மனுக்கு அபிஷேகம் ஜலம் எடுத்து வந்ததை இவரது முன்னோர்கள் சொன்னதாக அவர் நினைவில் இருப்பதை  நினைவுகூர்ந்தார்.

இந்த கிணற்றில் கிடக்கும் நாணயங்கள், தங்கம்,வெள்ளி பற்றிய ஆய்வினை மேற்கொள்ள கிணற்றை விரைவில் தூர் வருவது சம்பந்தமாக அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் உடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்க இருப்பதாகவும், தற்சமயம் கிணற்றின் மேல் பகுதி மட்டுமே இருப்பு கம்பிகளால் மூடப்பட்டிருக்கும் நிலையில், கிணற்றின் பாதுகாப்பு கருதி கிணற்றை சுற்றி பாதுகாப்பு வேலி அமைப்பது, கிணற்றிற்குள் செல்லும் சுரங்க பாதையில் மின் விளக்குகள் வசதி செய்யவும், குமரி மாவட்டம் அறநிலையத்துறை தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் கிணற்றை ஆய்வு செய்த பின் நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கலந்து பேசி முடிவெடுக்க உள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழிடம் தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

kanniyakumari
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment