Advertisment

சிறைக்கு வந்த காமராஜருக்கு இலைகளால் மாலை: பழ நெடுமாறன் ஃப்ளாஷ்பேக்

மதுரை ரயில் நிலையத்தில் இருந்து விடைபெறும் போது, அங்கு கூடியிருந்த கூட்டத்தினரிடம் என்னை காத்த மகன் நெடுமாறன் என அன்னை இந்திரா காந்தி தெரிவித்தார.

author-image
WebDesk
New Update
Pazha Nedumaran

Pazha Nedumaran

கன்னியாகுமரியில் சமீபத்தில் குடும்ப  நண்பர் இல்ல திருமணத்தில் கலந்து கொண்ட பழ.நெடுமாறன், தமிழகத்தின் கடந்த கால அரசியல்  நிகழ்வுகள் குறித்து மனம் திறந்தார்.

Advertisment

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் சேர்ந்த அந்த நாளில், கல்லூரியில் கொண்டு விட எனது தந்தை பழனியப்பன் உடன் வந்த போது, பல்கலை., சுற்று சுவருக்கு வெளியே மாணவர்களின் போராட்டம், அன்றைய கல்லூரி மாணவரான அன்பழகன் தலைமையில் நடப்பதை பார்த்தேன்.  நான் வகுப்பறைக்கு செல்லாது, மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் போய் அமர்ந்து கொண்டேன்.

அவருக்கு பின் மாணவர் தலைவர் தேர்தலில் நான் வெற்றி பெற்று தலைவராக இருந்தேன், என்றார்..

திமுக விலிருந்து எப்போது விலகினீர்கள் என்ற அடுத்த கேள்விக்கு, வேலூரில் நடந்த ஒரு நிகழ்வுதான். சொல்லின் செல்வர் இ.வே.கி.சம்பத், கவியரசர் கண்ணதாசன் இன்னும் பல நண்பர்கள் திமுக- வை விட்டு வெளியேறினோம் .. 

கலைஞர் கருணாநிதி ஆட்சியின் போது ஒரு வழக்கில் கைதாகி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டபோது, அரசு அந்த வழக்கில் மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்வோம் என்றது. ஆனால் நான் சொன்ன குற்றச்சாட்டு உண்மை, மன்னிப்பு கேட்க மாட்டேன் என்ற நிலையில் மருத்து சிறையில் இருந்த என்னை தலைவர் காமராஜர் பார்க்க வந்தார்.

அப்போது சிறை வளாகத்தில் இருந்த கோரட்டன்ஸ் செடியின் இலைகளை பறித்து ஒரு மாலையை உருவாக்கி தலைவர் காமராஜருக்கு அணிவித்தது, இன்றும் பசுமையான நினைவில். அந்த வழக்கில் சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த நிலையில், பெரும் தலைவர் காமராஜர் எனக்கு தெரிவித்த பாராட்டு வார்த்தை 'மாவீரன் நெடுமாறன்'.

மதுரையில் நடந்த கல்வீச்சு சம்பவத்தில் அன்னை இந்திரா காந்தி மீது தாக்குதல் நடந்த போது அதை தடுக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

மதுரை ரயில் நிலையத்தில் இருந்து விடைபெறும் போது, அங்கு கூடியிருந்த கூட்டத்தினரிடம் என்னை காத்த மகன் நெடுமாறன் என அன்னை இந்திரா காந்தி தெரிவித்தார. அதனை சொல்லும் போது அவரின் வார்த்தைகள் தடுமாறியதை காண முடிந்தது.

கவியரசர் பற்றிய கேள்வியாக.கவியரசர் நடத்திய'தென்றல்' பத்திரிகை பற்றி..

திமுக-வினர் மத்தியில் தென்றல் பத்திரிகைக்கு ஒரு தனித்த மரியாதை உண்டு. அந்த காலக் கட்டத்தில் ' முரசொலி'யை விட தென்றலுக்கு அதிகமான மரியாதை   உண்டு.

கவியரசர் கண்ணதாசன் நடத்திய பத்திரிகை தென்றல், இலக்கிய இதழான 'கண்ணதாசன்', மாலை பத்திரிகையான 'கடிதம்' எல்லாம் மிக பெரும் வாசகர்கள் வட்டத்தினை கொண்டது. கண்ணதாசன் அவர் நடத்திய பத்திரிகைகளை வெகுவாக காதலித்தவர்.

'கடிதம்' ஒரு மாலை நேர சிறிய வடிவத்தில் இரண்டு பக்கங்களே கொண்ட அந்த பத்திரிகையின்  விலை 0.10 பைசா. அன்றைய தினத்தில் நடந்த நிகழ்வுகளில் ஒன்று குறித்து கண்ணதாசன் பார்வை, தகவல் சொல்லும் பாணி.

கடைக்கு மாலை பத்திரிகை கடிதம் வரும் முன்னே, பத்திரிகைக்காக ஒரு  பெரும் கூட்டம் காத்து நிற்கும். இதை நானே நேரில் பார்த்திருக்கிறேன்..

குறிஞ்சி'பத்திரிகை

எனது குறிஞ்சி, ஒரு சமுக பத்திரிகையாக அது மலர்ந்த காலம் முழுவதும் திகழ்ந்து. குறிஞ்சி நடத்திய கவிதை போட்டி ஒன்றில் பங்குபெற்று முதல் பரிசு பெற்றவர் பின்னாளில் திரைப் படங்களில் படல் எழுதிய கல்லூரி பேராசிரியர் ஆன மு.மேத்தா.

எனது அரசியல் பணி காரணமாக பத்திரிகை பணிகளை முறையாக தொடர முடியாத நிலை என்றாலும், பின்னாளில்.காங்கிரஸ் கட்சிக்காக 'செய்தி' என்ற தினசரி பத்திரிகை தொடங்கி வெற்றகராமான ஒரு பயணம் தொடங்கினாலும் அன்று சில லட்சங்களை இழந்தது தான் மிச்சம்.

பத்திரிகைகள் நின்று போனாலும்.. புத்தகங்கள் தொடர்ந்து எழுதி வருகிறேன். தம்பி பிரபாகரன் பற்றிய முழுமையான ஒரு நூல் தொடர்ந்து மூன்றாவது பதிப்பாக வந்துள்ளது, தலைவர் காமராஜர் பற்றிய புத்தகம்.

தமிழகம் மட்டும் அல்ல கடல் கடந்து வாழும் உலக தமிழர்கள் தொடர்ந்து அவர்களின் அன்பான ஆதாரவு எனது எழுத்து பணிக்கு தினம் ஊற்றும் தண்ணீர் என அவருக்கே உரித்தான புன்னகையில் தெரிவித்தார்.

செய்தி: த.இ.தாகூர்., குமரி மாவட்டம்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment