கன்னியாகுமரி, ராமேஸ்வரம் மதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களுக்கு சென்று கோயில்களை தரிசிக்க ஐ.ஆர்.சி.டி.சி 5 நாள் டூர் பேக்கேஜ்ஜை வழங்குகிறது. விலையும் மிகவும் குறைவுதான், கோடை விடுமுறை சுற்றுலாவுக்கு செல்ல திட்டமிடுபவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
கோடை விடுமுறை முடிவடைய உள்ள நிலையில், தங்கள் சம்மர் சுற்றுலாவை பலரும் திட்டமிட்டு வருகின்றனர். அவர்களுக்காக ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) பெங்களூரில் இருந்து கன்னியாகுமரி, ராமேஸ்வரம், மதுரை கோயில்களைக் காண 5 நாள் டூர் பேக்கேஜ் மூலம் ஒரு அற்புதமான வாய்ப்பை வழங்குகிறது.
ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) பெங்களூரில் இருந்து கன்னியாகுமரி, ராமேஸ்வரம், மதுரை கோயில்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களை உள்ளடக்கிய ரயில் பயணத் தொகுப்பை, ரூ.10 ஆயிரம் விலையில் 5 நாட்களில் பார்க்கலாம்.
கன்னியாகுமரி
இந்தியா முழுவதும் இருந்து மக்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களில் ஒன்று கன்னியாகுமரி. வங்காள விரிகுடா, அரபிக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகிய மூன்று கடல்கள் சந்திக்கும் தீபகற்ப இந்தியாவின் தென் முனைப் பகுதி கன்னியாகுமரி. கன்னியாகுமரியில், சூரியோதயத்தையும், திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை ஆகியவற்றைக் காணலாம்.
ராமேஸ்வரம்
ஆன்மீக சுற்றுலா தலங்களுக்கு செல்ல விரும்புபவர்களின் பட்டியலில் தவறாமல் இடம்பெறும் இடங்களில் ராமேஸ்வரமும் ஒன்று. இந்தியாவில் உள்ள மிகவும் பிரபலமான கோவில்களில் ராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாதசுவாமி கோயில். இந்த பகுதிக்கு ராமரின் வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. ராமேஸ்வரம் புனித பூமியாகக் கருதப்படுகிறது.
புனித தலங்களில் நீராட விரும்புபவர்கள், தென்னிந்தியாவின் காசி என்று ராமேஸ்வரத்தை அழைக்கிறார்கள். காசி செல்ல முடியாதவர்கள் ராமேஸ்வரம் சென்று நீராடினால் போதும் அந்த பலன் கிடைத்துவிடும் என்று இந்துக்கள் மத்தியில் நம்பிக்கை உள்ளது.
மதுரை
தமிழ்நாட்டின் பழமையான நகரம் மதுரை. மதுரை என்றாலே அனைவருக்கும் முதலில் தோன்றுவது மதுரை மீனாட்சி அம்மன் கோயில்தான். இந்த சம்மர் விடுமுறையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை தரிசிக்க விரும்புகிறீர்கள் என்றால், ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) வழங்கும் 5 நாள் டூர் பேக்கேஜ்ஜை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
நீங்கள் கன்னியாகுமரி, ராமேஸ்வரம், மதுரை சுற்றுலாத் தலங்களைப் பார்க்க விரும்புகிறீர்களா? ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) வழங்கும் 5 நாள் டூர் பேக்கேஜ் விவரங்களை விரிவாக தெரிந்து கொள்ள ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) இணையதளத்திற்கு சென்று பாருங்கள்.