/indian-express-tamil/media/media_files/9JLQzNjt8pMRobXQVyZi.jpeg)
கன்னியாகுமரி முக்கடல் சங்கம் பகுதியில்,மூன்று கடல்கள் சந்திக்கும் பகுதியில் மக்கள் கால, காலமாக புனித நீராடி வருவது வாடிக்கை ஆனது.
ஒவ்வொரு ஆண்டும் 'ஆடி' மற்றும் 'தை' அமாவாசை தினத்தில் மறைந்த முன்னோர்கள் நினைவாக. ஐயர் தர்பணம் பூஜை செய்து இலையில் வைத்து கொடுக்கும் எள், அரிசி,தர்ப்பண புல், விபூதி, குங்குமம் இவற்றை தலையில் வைத்த வண்ணம் முக்கடல் சங்கமத்தில் கடலில் மூழ்கிய நிலையில் நீராடி கடலில் விட்டு விடுவது ஒரு சடங்கு.
ஆடி அமாவாசை தினத்தில் தான் முன்னோர் நினைவில் கடலில் புனித நீராட,ஆண், பெண்கள் என மிகுந்த மக்கள் கூட்டம் காணப்படும். இன்று (பெப்ரவரி_9)ம் நாள் 'தை' அமாவாசை தினத்தில் கன்னியாகுமரி முக்கடல் பகுதியில் மிகுந்த மக்கள் கூட்டம் இல்லை,அது போன்று தர்பணம் செய்யும் 'ஐயர்கள்' எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது. கடலோர காவல்படை காவலர்கள் பிரத்யேக வண்ண சீர் உடையில் கடலில் புனித நீராடுவேர் பாதுகாப்பை கண் காணித்தனர்.
புனித நீராடும் மக்கள் கூட்டத்துடன் சுற்றுலா பயணிகள் கலந்திருந்தனர். கன்னியாகுமரி நீல வண்ண முக்கடலின் நீர் பரப்பிலிருந்து எழும் சூரிய உதயம் காட்சியை காண பல்வேறு மொழி, பல்வேறு மாநிலங்களின் மக்கள் கூடியிருந்தனர்.
செய்தி: த.இ.தாகூர்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.