kanyakumari | ஆந்திரா மாநிலம் திருப்பதியில் மலை மேல் கோவில் கொண்டுள்ள வெங்கடாசலபதி, கன்னியாகுமரியில் கடற்கரை ஓரத்திலும் கோவில் கொண்டுள்ளார்.
கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவில் வரும் பக்தர்களுக்காக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் தயாரிக்கப்பட்ட லட்டுகள், கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலிலும் பிரசாதமாக விற்பனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பக்த்தர்களால் நீண்ட காலமாக வைக்கப்பட்டுவருகிறது.
இந்த நிலையில், சேகர் ரெட்டி அண்மையில் கன்னியாகுமரி வந்திருந்த போது, திருமலை திருப்பதியில் தயாரிக்கப்படும் லட்டு, டிசம்பர் முதல் கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் விற்பனை செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், முதல் கட்டமாக நேற்று (டிச.1) 5000 லட்டுகள் கொண்டு வரப்பட்டன.
இந்த லட்டுகளின் விற்பனை இன்று காலை தொடங்கியது. ஒரு லட்டு ரூ.50க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இந்த லட்டு சனிக்கிழமை தோறும் விற்பனை செய்யப்படும். இதனை மக்கள் பயப்பக்தி உடன் வாங்கிச் சென்றனர்.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“