ஒரு முறை காரப் பொடி இப்படி செய்யுங்க, செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
பூண்டு – 200 கிராம்
வத்தல் – 200 கிராம்
காஷ்மீர் வத்தல் – 20
உப்பு
எலுமிச்சை அளவு புலி
செய்முறை : முதலில் வத்தலை நன்றாக வறுக்க வேண்டும். நிறம் மாறியதும், இதை தனியாக எடுத்து வைத்துகொள்ளுங்கள். பூண்டை வதக்க வேண்டும். தொடர்ந்து காஷ்மீரி வத்தலை வதக்கவும். தொடர்ந்து இதை எடுத்து வைத்துகொள்ளவும். தொடர்ந்து உப்பை வறுக்க வேண்டும். தொடர்ந்து புளியை வறுக்க வேண்டும். முதலில் வத்தல் மற்றும் புளியை அரைக்க வேண்டும். தொடர்ந்து இதில் பூண்டு, உப்பு சேர்த்து அரைக்க வேண்டும். கொர கொரப்பாக அரைக்கவும். 100 எம். எல் நல்லெண்ணை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து அரைத்துகொள்ள வேண்டும். இது 1 மாதம் வரை கெட்டுப்போகாது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“