சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பாதரக்குடி ஊரைச் சேர்ந்த தம்பதி ஆறுமுகம்- அமுதா. இதில் ஆறுமுகம் முன்னாள் வங்கி ஊழியர் ஆவார். இவர்களின் இரண்டாவது மகன் சதீஷ்குமார்.
இவர் கடந்த ஆறு ஆண்டுகளாக தைவான் நாட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அவரது நிறுவனத்தின் அருகே வேறொரு நிறுவனத்தில் பணிபுரிந்த தைவான் நாட்டைச் சேர்ந்த ஹோ சின் ஹீய் இவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாய் மாறியது.
/indian-express-tamil/media/media_files/2024/11/17/n4ijgrYdIM0lafa2aVRX.jpeg)
இந்நிலையில் பணி மாறுதல் செய்து சதீஷ்குமார் அமெரிக்காவில் தற்போது பணிபுரிந்து வருகிறார். சதீஷ்குமார் தனது காதலியான ஹோ சின் ஹீய்வை திருமணம் செய்வதாக தனது பெற்றோரும் தெரிவிக்க இருவர் வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து இன்று காரைக்குடி தனியார் திருமண மண்டபத்தில் மந்திரம் முழங்க மேள வாத்தியத்துடன் உறவினர்கள் புடை சூழ திருமணம் நடைபெற்றது. தைவான் நாட்டிலிருந்து பெண்ணின் உறவினர்கள் ஏழு பேர் திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“