கார்த்திகை தீபத் திருவிழா: சொந்தங்களுக்கு வாழ்த்து சொல்லி மகிழ வண்ணப் படங்கள்

Happy Karthigai Deepam 2021 Wishes in Tamil: கார்த்திகை திருநாள் வாழ்த்துகளை உங்கள் நண்பர்கள், உறவினர்கள், இதயம் கவர்ந்தவர்களுக்கு தவறாமல் சொல்லி விடுங்கள். உங்களுக்கான இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் வாழ்த்துப் பதிவுகள் இதோ…

Tamil Festivel Karthikai Deepm Update : தமிழரின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்று கார்த்திகை தீபம். இந்த கார்த்திகை தீப திருநாளில் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்ல, இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் உங்களுக்காக வாழ்த்து அட்டைகளை வெளியிட்டுள்ளது பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தீபங்கள் பேசும் திருக் கார்த்திகை தீபத் திருநாளில் அனைவருக்கும் கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள். தமிழர்களின் தீபத்திருநாளாம் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு உங்களது வாழ்த்துக்களை நண்பர்கள், உறவினர்கள், இதயம் கவர்ந்தவர்களுக்கு தவறாமல் சொல்லி விடுங்கள். உங்கள் வாழ்த்துகளை தெரிவிக்க வசதியாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இங்கு சில வாழ்த்துப் பதிவுகளை வெளியிடுகிறது.

திருக்கார்த்திகை அன்று ஏற்றப்படும் தீபங்களை யார் பார்த்தாலும் அவர்களுக்கு நீண்ட ஆயுள் உண்டாகும் என்பது ஐதீகம். கார்த்திகை தீபத் திருநாள் அன்று 60 வயது நிரம்பிய சுமங்கலிப் பெண்ணைக் கொண்டு தீபம் ஏற்றி, அதிலிருந்து 6 தீபங்கள் சுமங்கலிப் பெண்கள் ஏற்ற வேண்டும். அவர்கள் ஏற்றும் தீபங்களில் இருந்து ஆறு, ஆறாக பசுநெய் விளக்குகளை ஏற்றி வீட்டை அலங்கரித்தால் அவர்களுக்கு தீர்க்க சுமங்கலித்துவ வாழ்க்கை அமையும் என்பதும் நம்பிக்கை.

வடமாநிலங்களில் கார்த்திகை தீபத்திருநாள் அன்று பெண்கள் தீபம் ஏற்றி, அதை இலையில் வைத்து ஆற்றில் விடும் வழக்கம் உள்ளது. இப்படிச் செய்தால், தங்கள் உடன் பிறந்தவர்கள் நீண்ட ஆயுள் பெறுவார்கள் என்று நம்புகிறார்கள்.

Happy Karthigai Deepam wishes, Images HD, Wallpapers, Quotes, Whatsapp Status, SMS, Fb Messages and Greetings to your friends and family

இந்துக்கள் கொண்டாடும் முக்கியமான பண்டிகைகளில் கார்த்திகை தீபமும் ஒன்று. தீபம் என்பது தன்னை கரைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு ஒளி வழங்குகிறது. பிறர் நலம் பேணுவதற்காக தான் உயிரையே தியாகம் செய்ய வேண்டும் என்பது கார்த்திகை தீபத் தத்துவம்.

தீபத்தின் ஒளி, எப்படி மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து உயிரினங்களின் மீதும் விழுகிறதோ.. அதுபோல் மனிதனின் மனதில் எழும் அன்பு ஒளி எல்லார் மீதும் பட வேண்டும் என்பதையே கார்த்திகை தீபம் நமக்கு உணர்த்துகிறது. இந்த நன்னாளில் நீங்கள் பகிர்ந்து மகிழ இதோ வாழ்த்து மடல்கள்…

Karthigai Deepam 2021 Wishes in Tamil

Karthigai Deepam 2021 Wishes in Tamil

Karthigai Deepam 2021 Wishes in Tamil

Karthigai Deepam 2021 Wishes in Tamil

Karthigai Deepam 2021 Wishes in Tamil

இந்த வாழ்த்துக்கள் மூலம் கார்த்திகை தீப திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Karthigai deepam 2021 wishes in tamil karthigai deepam quotes speech images hd gif pics wallpapers whatsapp status

Next Story
முதல்வர் ஸ்டாலின் பயன்படுத்தும் புது லேண்ட் ரோவர் காரில் இவ்வளவு சிறப்பு அம்சங்களா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com