கோவையில் இருந்து பாலக்காடு செல்லும் சாலையில் குனியமுத்தூர் அடுத்த மதுக்கரையில் பழமை வாய்ந்த தர்ம லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.
இந்த நிகழ்வில் 5000 - க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இதை அடுத்து தர்மலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
பின்னர் ஆறு அடி உயரம் கொண்ட கொப்பரையல் ஆயிரம் மீட்டர் காட திரியில் இருநூற்று இருபத்தைந்து லிட்டர் நெய் ஊற்றி மாலை 6 மணி அளவில் கோவிலில் 30 அடி உயரம் கொண்ட பரணில் மகா தீபம் ஏற்றப்பட்டது. சிவ சிவ சிவ என சரண கோஷம் எழுப்பிப்பி பக்கதர்கள் வழி்ப்பட்டனர்.
அதே போல, மருதமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
கோவை மாவட்டத்தில் உள்ள பிரபலமான கோவில்களில் ஒன்று மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில். மலைகள் சூழ்ந்த இம்மலைக் கோவிலாக திகழும் இக்கோவில் முருகப்பெருமானின் 7 - வது படை வீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது. இங்கு பண்டிகை காலங்களில் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு தினமும் ஆன்மீக சொற்பொழிவுகள் நடத்தப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று வள்ளி - தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி பல்லக்கில் எழுந்தருளி, ஆலய உள்வலம் வருவார். அதைத் தொடர்ந்து மலைக் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
கார்த்திகை மாதம் முருகனுக்கு உரிய மாதம் என்பதாலும், மலைக் கோவிலில் ஏற்றப்படும் தீபத்தை தரிசனம் செய்வது திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீப தரிசனத்திற்கு சமமானது என்பதாலும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து மருதமலைக்கு, பாதயாத்திரையாக அரோகரா அரோகரா கோஷம் முழங்க வந்தும் சாமி தரிசனம் செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“