கார்த்திகை தீபத்திற்கு ஏற்றப்படும் அகல் விளக்கு அணையாமல் எரிவதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்னவென்று தற்போது பார்க்கலாம்.
கடைகளில் இருந்து வாங்கிய திரியை பயன்படுத்துவதற்கு பதிலாக நாமே திரியை உருவாக்கலாம். இதற்கு தேவையான அளவு பஞ்சை சிறிய துண்டுகளாக எடுத்துக் கொள்ளவும். முதலில் மிகச் சிறிய அளவு பஞ்சை உருட்டி, அதனை சற்று பெரிய அளவு பஞ்சில் வைக்க வேண்டும். பின்னர், இதை திரி போல் சுற்றிக் கொள்ள வேண்டும். முக்கியமாக, காய்த்து ஆற வைத்த பாலில், சிறிய துண்டு கற்பூரத்தை உடைத்து போட்டு, அதனை தொட்டு திரிபோல் சுற்ற வேண்டும். பின்னர், இந்த பஞ்சுகளை சிறிய அளவு எண்ணெய்யில் ஊற வைக்க வேண்டும்.
விளக்கு ஏற்றுவதற்கு முன்பாக சுமார் மூன்று மணி நேரம் அவற்றை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அதன் பின்னர், விளக்கை எடுத்து வெயிலில் காய வைத்து பின்னர் துடைத்துக் கொள்ளவும். விளக்கு நன்றாக காய்ந்ததும், அதனுள் முகத்திற்கு பயன்படுத்தப்படும் பௌடரை சிறிய அளவு போட்டு தேய்த்துக் கொள்ளவும்.
பின்னர், விளக்கில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, அதில் நாம் செய்த திரியை போட்டு பற்ற வைக்கவும். அதன்பின்னர், விளக்கில் சிறிய துண்டு கற்பூரம் போட்டால் விளக்கு அணையாமல் நீண்ட நேரத்திற்கு எரியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“