கருணாநிதி உணவு:
திமுக தலைவர் கருணாநிதி தன் உடம்பை தானே படித்தவர். உடலுக்கு ஏற்ற உணவு எது, உணவுக்கு ஏற்ற உடலும் எது என்று அவரிடம் கேட்டால் மருத்துவர்கள் கூட அவரிடம் தோற்றுப்போய் விடுவார்கள்.
45 வயதில் கருணாநிதி முதல்வராகும் வரை அவர் எந்தவித உடற்பயிற்சியோ, உணவுக்கட்டுபாடு பின்பற்றியதில்லை. ஆனாலும் கட்டுக்கோப்பான உடல் அமைப்பை பெற்றிருந்தார். அதற்கு காரணம் சிறுவயதிலியே அவர் செய்த வேலைகள்.
45 வயதிற்கு பின்பு கருணாநிதி தனது உணவு முறையை அப்படியே மாற்றிக் கொண்டார். பிரபல யோகா பயிற்சியாளிடம் சென்று முறையாக யோகாவும் கற்றுக் கொண்டார். வயதிற்கு ஏற்பவும் காலநிலைக்கு ஏற்பவும் உணவு முறைகளை மாற்றிக் கொண்டவர் கருணாநிதி. ”எப்படி உங்களால் மட்டும் இந்த வயதிலும் இவ்வளவு சுறுசுறுப்பாக இருக்க முடிகிறது?” என்று கருணாநிதியின் நெருங்கிய நண்பர்கள் அவர்களிடம் ஆச்சரியத்துடன் கேட்பார்களாம்.
ஒருமுறை கருணாநிதியின் உதவியாளர் நித்யா அளித்த பேட்டி ஒன்றில் கருணாநிதியின் உணவுமுறை குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்திருந்தார். காலையில் பல் துலக்கினதும் ஒரு காபி. பிறகு இரண்டு இட்லி. இட்லியுடன் தக்காளி, புதினான்னு ஏதாவது ஒரு சட்னி கண்டிப்பாக இருக்கும்.
மதியம் சாம்பார் சாதம், தனியாக வேக வைத்த காய்கறி கீரை, மாலையில் தோசை இதுதான் அவரின் அன்றாட உணவு. ஆரம்பத்தில் மாமிச உணவுகளைச் சாப்பிட்டபோது விறால் மீனை மிகவும் அதிகம் விரும்பிச் சாப்பிடுவார் கருணாநிதி. குறிப்பாக வஞ்சிரம் மீன் குழம்பு என்றால் கருணாநிதிக்கு கொள்ளை பிரியம்.
அதன் பின்பு அசைவ உணவில் சில மாற்றங்களை செய்துக் கொண்டார். 10 நாட்களுக்கு ஒருமுறை விரால் மீன் மற்றும் வஞ்சர மீன் எடுத்துக் கொள்வதை பழகமாக்கிக் கொண்டார். 2006 ஆம் ஆண்டில் தால் கருணாநிதியின் உடல் எடை கூடியது. அந்த நேரத்தில் தான் மூட்டு வலியும் எதிரியாக அமைந்தது.
செயற்கை உணவுக்குழாய் பொருத்தப்பட்ட பிறகு, மருத்துவர்கள் சொல்கிற உணவுக்கரைசலை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தார் கருணாநிதி. அதே போல் அறிவாலயத்துக்கு அருகே உள்ள ஆனந்த பவன் ஓட்டலில் விற்கும் போண்டா கருணாநிதிக்கு மிகவும் பிடிக்கும். அறிவாலயத்தில் பணிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும் நேரத்தில் உதவியாளர்களிடம் அந்த போண்டாவை வாங்கி வரச் சொல்வார்.
வயதுக்கு ஏற்றவாறு உணவுகளை எடுத்துக் கொள்ளும் பழக்கத்துக்கும். எவ்வளவு டேஸ்ட்டாக இருந்தாலும் அளவுடன் தான் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற பழக்கத்தை தவராமல் கடைப்பிடிப்பார்.
கருணாநிதியின் நீண்ட நாள் ஆயுளுக்கு உணவுக்கட்டுப்பாடு, யோகாவுக்கு முக்கியமான பங்குண்டு என்றால் அது மிகையல்ல.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.