கருஞ்சீரகம் அதிக மருத்துவ நன்மைகள் இருக்கிறது. இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. சளியாக ஏற்படும் மூக்கடைப்பை குணமாக்கும்.
இதில் தைமோக்யூனோன், இருப்பதால் வீக்கத்திற்கு எதிராக செயல்படும். இது வீக்கத்திற்கு எதிராக செயல்படுகிறது. உடலில் உள்ள வீக்கத்தை குறைக்கிறது.
இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட்டான பிளாபாநாய்ட்ஸ் மற்றும் கரோட்டிநாய்ட்ஸ் உள்ளது. இந்த ஆண்டி ஆக்ஸிடண்ட் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. செல்களை மீண்டும் உருவாக்க உதவுகிறது. வயதாவதை தடுக்கிறது.
இந்நிலையில் இதில் இருக்கும் பொருட்கள் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. இதனால் உடலை பாதிக்கும் நோய்கள் ஏற்படாது.
இது ஆஸ்துமா பிரச்சனைகளை தீர்க்க உதவியாக இருப்பதாக கூறப்படுகிறது. பாரம்பரிய மருத்துவ முறையில்தான் இது ஆஸ்துமாவிற்கு பயன்படும் என்று கூறப்படுகிறது.
ஜீரண ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்குகிறது. மேலும் அஜீரணம், வயிறு உப்புதல் வாயுத்தொல்லையை குணமாக்கும். பேக்டீரியா தொற்றுகளை தடுக்கும். இதனால் குடல் ஆரோக்கியமாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“