வெங்கடேஷ் டேஷ் பட் செய்வது போல் கருப்பு கவுனி அரிசியில் அல்வா செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
கருப்பு கவுனி அரிசியை 1 கப்
2 ½ கப் தண்ணீர்
1 கப் தண்ணீர்
1 ½ கப் வெல்லம்
¾ கப் தேங்காய் பால்
கால் ஸ்பூன் ஏலக்காய் பொடி
அரை கப் நெய்
முந்திரி பருப்பு
செய்முறை : கவுனி அரிசியை தண்ணீர் சேர்த்து 12 மணி நேரம் ஊற வைக்கவும். தொடர்ந்து அதை தண்ணீர் சேர்த்து அரைத்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சூட வைத்து, வெல்லம் சேர்த்து பாகு காய்ச்சவும். இதில் அரைத்த கவுனி அரிசி மாவை சேர்த்து கிண்டவும். அதில் தேங்காய் பால் ஊற்றி கிளரவும். தொடர்ந்து நெய் கொஞ்சம், கொஞ்சமாக சேர்த்து கிளரவும். நெய் அல்வாவில் இருந்து வெளிவரும் வரை கிளரவும். தொடர்ந்து நெய்யில் வறுத்த முந்திரியை சேர்த்து வறுத்து, இதில் சேர்க்கவும்.