muttai thokku recipe muttai thokku recipe in tamil
Karuvadu kulambu recipe, karuvadu kulambu in tamil : பலருக்கு மீன் குழம்பை விட கருவாட்டு குழம்பு என்றால் கொள்ளை பிரியம். அதிலும் அந்த கருவாட்டு குழம்பை சமைத்து, மறுநாள் சாப்பிட்டால், அதன் சுவையே தனி தான். குறிப்பாக கிராமப்புறங்களில் சமைக்கப்படும் கருவாட்டு குழம்பு தான் ருசியாக இருக்கும்.
Advertisment
கருவாடு - 200 கிராம்
கத்திரிக்காய் - 1/4 கிலோ
உருளைக்கிழங்கு - 2
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 2
புளி - 1 எலுமிச்சை அளவு
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
அரைக்க தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 1 கையளவு
தனியாத் தூள் - 50 கிராம்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
பூண்டு - 4 பற்கள்
துருவிய தேங்காய் - 1/4 கப்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வரமிளகாய் சேர்த்து வறுத்து, பின் அத்துடன் சின்ன வெங்காயம், மல்லி தூள், சீரகம், மிளகு, கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்கி இறக்க வேண்டும்.
பின்னர் அதனை குளிர வைத்து, மிக்ஸி அல்லது அம்மியில் போட்டு, அத்துடன் தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு கருவாட்டை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து, பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அடுத்து அதில் கத்திரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும். காய்கள் நன்கு வெந்ததும், அதில் உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும். பின் அதில் புளிச்சாற்றினை ஊற்றி, நன்கு கொதிக்க விட வேண்டும். புளிச்சாறானது நன்கு கொதித்ததும், அதில் கருவாட்டை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான கருவாட்டு குழம்பு தயார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”