உங்களுக்கு கறிவேப்பிலையை பார்த்தால் சாப்பிடத் தோன்றவில்லையா? அப்படியானால் அதைக் கொண்டு சட்னி தயாரித்து சாப்பிடுங்கள். இந்த கறிவேப்பிலை சட்னி இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். பலர் சமையலில் சேர்க்கும் கறிவேப்பிலையை தூக்கி எறிந்துவிடுவோம். கறிவேப்பிலை உடலுக்கு மிகவும் நல்லது. கறிவேப்பிலை சாப்பிட்டால் உடலுக்கு வேண்டிய இரும்புச்சத்து மற்றும் பிற சத்துகள் கிடைக்கும்.
வறுத்து அரைப்பதற்கு தேவையான பொருட்கள்:
* கறிவேப்பிலை - 1/2 கப்
* தேங்காய் - 1/4 கப்
* உளுத்தம் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
* கடலை பருப்பு - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 சிறியது
* புளி - 1 சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு....
* எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிறிய சிட்டிகை
செய்முறை:
*முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து, அத்துடன் புளியை சேர்த்து இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கறிவேப்பிலையை சேர்த்து மொறுமொறுப்பாகும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் தேங்காய், வறுத்த பருப்புகள், புளி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு பேஸ்ட் போல் அரைத்து, ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
*பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, அரைத்த சட்னியுடன் சேர்த்தால், கறிவேப்பிலை சட்னி தயார்.