Karuveppilai Recipe In Tamil, Karuveppilai Chutney Tamil Video: கருவேப்பிலை மிக சத்தான ஒரு உணவுப் பொருள். உடல் நலத்திற்கு தேவையான இரும்புச் சத்து இதில் இருக்கிறது. எனவே கருவேப்பிலையை தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டியது அவசியம்.
Advertisment
கருவேப்பிலையை ரசமாக, குழம்பாக என பல வகைகளில் உணவில் இடம் பெறச் செய்ய முடியும். அந்த வகையில் கருவேப்பிலை சட்னி எப்படி தயார் செய்வது எனப் பார்க்கலாம்.
Karuveppilai Chutney Tamil Video: கருவேப்பிலை சட்னி
Advertisment
Advertisements
கருவேப்பிலை சட்னி தயார் செய்யத் தேவையான பொருட்கள்: தேங்காய் - 1 துண்டு (துருவியது), உளுந்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன், கருவேப்பிலை - 1/4 கப், பச்சை மிளகாய் - 3, புளி - கோலி குண்டு அளவு, கடுகு - 3/4 டீ ஸ்பூன், எண்ணெய் - 2 டீ ஸ்பூன், உப்பு - தேவையான அளவு
கருவேப்பிலை சட்னி செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் உளுந்தம் பருப்பு போட்டு பொன்னிறமாக வறுக்கவும். பிறகு கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வறுத்து இறக்கிக் ஆற வைக்க வேண்டும்.
அது ஆறியவுடன் அதனை மிக்ஸியில் போட வேண்டும். அதனுடன் துருவிய தேங்காய், புளி, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு மென்மையாக அரைக்க வேண்டும். அரைத்து, அதை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த சட்னி கலவையில் ஊற்றி கலக்கவும். இப்போது சத்தான கறிவேப்பிலை சட்னி ரெடி! ஐந்தே நிமிடங்களில் இதை செய்து முடித்து, டிபனுக்கு பயன்படுத்தலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"