டேஸ்டி.. ஹெல்தி..! கருவேப்பிலை சாதம் இப்படி செய்து பாருங்க!

Karuveppilai sadam making tamil video: மலிவான விலையில் அல்லது இலவசமாகவே கிடைக்கும் கருவேப்பிலையை கூடுமான வரை உணவில் தவிர்க்காமல் இருப்போம்.

Karuveppilai sadam making tamil video: மலிவான விலையில் அல்லது இலவசமாகவே கிடைக்கும் கருவேப்பிலையை கூடுமான வரை உணவில் தவிர்க்காமல் இருப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
டேஸ்டி.. ஹெல்தி..! கருவேப்பிலை சாதம் இப்படி செய்து பாருங்க!

Karuveppilai recipes in tamil, karuveppilai sadam making tamil video: கருவேப்பிலையைப் போல பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவதாக ஒரு பழமொழி கேள்விப்பட்டிருப்போம். கருவேப்பிலையின் முழுப் பயனை அறியாதவர்கள்தான் அப்படி தூக்கி எறிய முடியும். உடல் இயக்கத்திற்கு தேவையான இரும்புச் சத்து மிகுதியான ஒரு உணவுப் பொருள் கருவேப்பிலை.

Advertisment

எனவே கூட்டாக, சூப்பாக, குழம்பாக, துவையலாக என ஏதாவதொரு ரூபத்தில் கருவேப்பிலையை பயன்படுத்துவது நல்லது. கருவேப்பிலை சாதம் தயார் செய்து சாப்பிடுவதும் உகந்தது. கருவேப்பிலை சாதம் எப்படி தயார் செய்வது? என இங்கு பார்க்கலாம்.

karuveppilai sadam making tamil video: கருவேப்பிலை சாதம்

Advertisment
Advertisements

கருவேப்பிலை சாதம் செய்யத் தேவையான பொருட்கள்: அரிசி- 2 கப், கருவேப்பிலை - ஒரு கப், தேங்காய் துருவல்- அரை கப், கடலை பருப்பு- ஒரு டேபிள் ஸ்பூன், காய்ந்த மிளகாய்- 4, மிளகு- ஒரு டீ ஸ்பூன், பெருங்காயம்- சிறு துண்டு, நெய்- ஒரு டேபிள் ஸ்பூன், தேங்காய் எண்ணெய்- ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு- அரை டேபிள் ஸ்பூன், முந்திரி பருப்பு- 10, உப்பு- ஒரு டேபிள் ஸ்பூன்

கருவேப்பிலை சாதம் செய்முறை:

கருவேப்பிலை சாதம் செய்முறை வருமாறு: அரிசியை வேகவைத்து வடித்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு பெருங்காயம், கருவேப்பிலை, மிளகாய் ஆகியவற்றை வதக்கவும். பின்னர் அதில் மிளகு சேர்த்து சிறிது வறுங்கள். அதில் கறிவேப்பிலையையும் போட்டு ஒரு நிமிடம் வதக்க வேண்டும். பின்னர் தேங்காய் துருவலைச் சேர்த்து வதக்கி, இறக்கி விடுங்கள். இவை ஆறிய பின்னர் மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும் .

தாளிப்பதற்கான வாணலியில் நெய் விட்டு கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன் முந்திரி பருப்பை சேர்த்து வறுக்கவும். ஒரு கொத்து கறிவேப்பிலையை உருவி போடவும். பின் சாதம், மிக்சியில் பொடித்த கலவையை சேர்த்து கிளறவும். தேவைக்கு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கி வையுங்கள். சுவையான கருவேப்பிலை சாதம் தயார்.

நம் வீட்டு அருகில் மலிவான விலையில் அல்லது இலவசமாகவே கிடைக்கும் கருவேப்பிலையை கூடுமான வரை உணவில் தவிர்க்காமல் இருப்போம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

 

 

Food Recipes

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: