சுவையான கருவேப்பிலை குழம்பு: எவ்ளோ நோய்களை விரட்டுது பாருங்க!

karuveppilai kuzhambu making video: முடி உதிர்வதை தடுத்தல், கூந்தலை கருகருவென வளரச் செய்தல் என கருவேப்பிலையின் பயன்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

karuveppilai kuzhambu making video: முடி உதிர்வதை தடுத்தல், கூந்தலை கருகருவென வளரச் செய்தல் என கருவேப்பிலையின் பயன்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

author-image
WebDesk
New Update
சுவையான கருவேப்பிலை குழம்பு: எவ்ளோ நோய்களை விரட்டுது பாருங்க!

karuveppilai tamil news

Karuveppilai tamil news, Karuveppilai kuzhambu making video: சென்னை திருவல்லிக்கேணியில் ஓரிரு மெஸ்களில் கருவேப்பிலை குழம்பு, அவ்வளவு சூப்பராக வைத்திருப்பார்கள். வீட்டிலும் அவ்வளவு சுவையாக அதைச் செய்ய முடியும்.

Advertisment

மறந்து விடாதீர்கள்... கருவேப்பிலை, வெறுமனே மணத்திற்கும், சுவைக்குமான உணவுப் பொருள் அன்று! தில் வைட்டமின்களும் இரும்புச் சத்தும் அதிகம். எனவே ரத்த சோகைக்கு இது அற்புத மருந்து. ரத்தத்தில் சர்க்கரை அளவை சீர்செய்வதால், சர்க்கரை நோயாளிகளுக்கும் சிறந்த மருந்து. இன்னும் உடலில் கெட்ட கொழுப்பை கரைத்து தொப்பைப் பிரச்னையை சரி செய்தல், முடி உதிர்வதை தடுத்தல், கூந்தலை கருகருவென வளரச் செய்தல் என கருவேப்பிலையின் பயன்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

karuveppilai kuzhambu making video: கருவேப்பிலை குழம்பு

அப்படிப்பட்ட பயனுள்ள கருவேப்பிலை மூலமாக ருசியான குழம்பு தயார் செய்யும் வாய்ப்பை தவற விடலாமா?

Advertisment
Advertisements

கருவேப்பிலை குழம்பு செய்யத் தேவையான பொருள்கள் :

கருவேப்பிலை - 1 கப், மிளகு - 1 தேக்கரண்டி, மணத்தக்காளி வற்றல் - 2 தேக்கரண்டி (மணத்தக்காளிக்குப் பதில் சுண்டைக்காய் வற்றலும் போடலாம்.), உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி, கடலைபருப்பு - 2 தேக்கரண்டி, சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி, மஞ்சள்பொடி - தேவையான அளவு, புளி - பெரிய எலுமிச்சம்பழம் அளவு, உப்பு - தேவையான அளவு, நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி, கடுகு, கருவேப்பிலை - தாளிக்க

செய்முறை :

முதலில் புளியைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். மிளகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை, கடலைப்பருப்பை சிறிது எண்ணெய்யில் வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் புளி கரைசலுடன் அரைத்த விழுது, மஞ்சள் தேவையான தண்ணீர் சேர்த்து கலந்து வைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, மணத்தக்காளி வற்றலை போட்டு தாளித்த பின் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்கவும். குழம்பு நன்றாக கொதித்து எண்ணெய் ஓரங்களில் வந்து பக்குவம் வந்ததும் இறக்கி பரிமாறவும். சூப்பரான சத்தான கருவேப்பிலை குழம்பு ரெடி.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

 

 

Food Recipes

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: