எண்ணெய் கத்திரிக்காய் காரக் குழம்பு இப்படி செய்து பாருங்க. இந்த ரெசிபி அவ்ளோ ருசியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
சின்ன கத்திரிக்காய் – 15
நல்லெண்ணை – 6 டேபிள் ஸ்பூன்
வெந்தயம்- அரை ஸ்பூன்
கடுகு – 1 ½ ஸ்பூன்
வெங்காயம் – 2 நறுக்கியது
பூண்டு -10
கருவேப்பிலை – 1 கொத்து
தக்காளி- 1 நறுக்கியது
உப்பு
மஞ்சள் பொடி – அரை ஸ்பூன்
பெரிய நெல்லிக்காய் அளவு புளி
மல்லிப் பொடி – 2 ஸ்பூன்
மிளகாய் பொடி – 2 ஸ்பூன்
வெல்லம் – சிறிய அளவு
செய்முறை: கத்திரிக்காய்களை, காம்பை நீக்கி, மேல் பகுதியை மற்று வெட்டி முழுதாக பயன்படுத்த வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து, கடுகு, வெந்தயம், பூண்டு, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். தொடர்ந்து நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். தொடர்ந்து அதில் தக்காளி சேர்த்து வதக்கவும். தற்போது கத்திரிக்காய்களை சேர்த்து வதக்கவும், உப்பு, மஞ்சள் பொடி சேர்க்கவும். இது நன்றாக வேக வேண்டும். தற்போது புலி கரைத்த தண்ணீரில், மல்லிப் பொடி ,மிளகாய் பொடி, வெல்லம் சேர்த்து கரைத்துகொள்ளவும். இதை கத்திரிக்காய்யில் ஊற்ற வேண்டும். கிளர வேண்டும். குழம்பு கொதித்ததும் அடுப்பை அணைக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“