kathirikai satham vangibath kathirikai satham recipe : கர்நாடகாவில் இந்த கத்தரிக்காய் சாதம் அல்லது வாங்கி பாத் மிகவும் பிரபலம். இப்போது கத்தரிக்காய் சாதத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Advertisment
பச்சரிசி-2 கப்
நல்ல பிஞ்சு கத்தரிக்காய்-1/2 கிலோ
Advertisment
Advertisements
மசாலா தயாரிக்க:
கடலைப்பருப்பு-1/2 கப்
கொத்தமல்லி விதை-1/2 கப்
வெந்தயம்-1 டீஸ்பூன்பட்டை-2
காய்ந்த மிளகாய்-10
வறுக்க எண்ணெய்-1/4 கப்
புளி-ஒரு எலுமிச்சை அளவு
உப்பு-தேவையான அளவு
செய்முறை:
புளியைக் கரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியை காய வைத்து அதில் கடலைப்பருப்பு, கொத்தமல்லி விதை வெந்தயம் என்று ஒவ்வொன்றாகப் பொடித்து (ட்ரை பவுடர்) வைத்துக் கொள்ளவும். இத்துடன் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
கத்தரிக்காயை நீள நீளமாகப் பிளந்து தயாராக வைத்துள்ள மசாலாவை அடைக்கவும்.
அடுப்பில் எண்ணெய் காய வைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து, கத்தரிக்காயையும் போட்டு நன்றாக வதக்கி, புளியைக் கரைத்து ஊற்றி, சிறிதளவு உப்பு மீண்டும் சேர்த்து மூடி வைக்கவும். கத்தரிக்காய் நன்றாக வெந்து, க்ரே பேஸ்ட் போல் ஆனவுடன், தயாராக வடித்து வைத்துள்ள சாதத்துடன் சேர்த்துக் கலந்து (குழையாமல் கலக்க வேண்டும்)
பரிமாறவும் சூடாகப் பரிமாறத் தேவையில்லை. ஒரு தட்டில் சாதத்தைப் பரத்தி சிறிதளவு நல்லெண்ணெய் போட்டுப் பின் கத்தரிக்காய் மசாலாவைப் பரத்தி, கலந்தால் சாதம் குழையாமல் கலக்கலாம். தயிர்ப் பச்சடி, பொறித்த அப்பளம், உருளைக் கிழங்கு ரோஸ்ட் கறி, அவியல் முதலியவைகளுடன் சேர்த்துப் பரிமாறினால், விருந்துக்கு நல்ல மெனு ருசியாக இருக்கும்.