/indian-express-tamil/media/media_files/2025/09/02/north-india-2025-09-02-13-54-37.jpg)
KC Palanisamy politics AIADMK DMK tea estate
ஊட்டி, பசுமை போர்த்திய மலைகளும், எழில் கொஞ்சும் இயற்கையும் நிறைந்த இடம். இது சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கம். ஆனால், இந்த மலைகளுக்குள், அரசியல்வாதி கே.சி. பழனிசாமியின் மற்றொரு உலகம் இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாது. அரசியல் அரங்கில் தீவிரமாக இயங்கும் இவர், ஊட்டிக்கு அருகில் உள்ள தனது 800 ஏக்கர் தேயிலைத் தோட்டத்தில் ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ்கிறார்.
அவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அரசியல் பயணத்தைப் பற்றி தி டிபேட் நேர்காணலில் கேசிபி மனம் திறந்து பேசினார்.
”பல பேருக்கு என்னை ஒரு அரசியல்வாதி மட்டும்தான் தெரியும். ஆனா, எனக்கு இந்தத் தேயிலைத் தோட்டமும் இன்னொரு உலகம். இது 1991-ல ஆரம்பிச்சது. கிட்டத்தட்ட 35 வருஷமா வெற்றிகரமா நடத்திட்டு வர்றோம். இங்க இருக்குற தேயிலை இலைகளை எடுத்து, தூளாக்கி உள்நாட்டுல விக்கிறதோட, வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்றோம்.
சுமார் 800 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தத் தோட்டம், இயற்கையோட மடியில இருக்கு. ஊட்டியில இருந்து 15 கி.மீ. தள்ளி இருக்குற இந்த இடம், கரடி, புலி, யானைன்னு பல வனவிலங்குகளோட இருப்பிடமா இருக்கு. அவங்களோட பாதுகாப்பை உறுதிசெய்ய, பொதுமக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் இங்க அனுமதி இல்லை. இது முழுக்க முழுக்க எங்களுடைய சொந்த இடம்.
இந்தத் தோட்டத்துல சுமார் 150 தொழிலாளர்கள் வேலை பார்க்குறாங்க. அவங்களுக்கெல்லாம் தேவையான எல்லா வசதிகளும் இங்கே செஞ்சு கொடுத்திருக்கோம். இது ஒரு குட்டி கிராமம் மாதிரி இருக்கும். அவங்களுக்கான சம்பளம், சட்டப்படி என்னவோ அதைச் சரியா கொடுத்துடுவோம்.
அரசியல் ஒருபக்கம் இருந்தாலும், நான் ஒரு தொழில் அதிபராகவும் இருக்கேன். என் அரசியல் செலவுகளுக்கு யாரையும் நம்பாம, இந்தத் தோட்டத்துல இருந்து வர்ற வருமானத்தையே பயன்படுத்திக்குறேன். ஒரு நண்பரோட நிதி நெருக்கடியைச் சரி செய்யப் போனப்பதான் இந்தத் தோட்டத்தை வாங்குற ஐடியா எனக்கு வந்துச்சு”, என்று கேசிபி அந்த நேர்காணலில் பகிர்ந்து கொண்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.