மன அழுத்தத்தால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்: ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்

மன அழுத்தம் அதிகரித்தால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என ஆராய்ச்சி ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மன அழுத்தம் அதிகரித்தால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என ஆராய்ச்சி ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மன அழுத்தம் காரணமாக புற்றுநோய் கட்டிகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என அந்த ஆய்வு எச்சரிக்கிறது.

இருப்பினும், மன அழுத்தம் என்பதை மருத்துவ ரீதியாக அளவிட முடியாது என்பதால், அதன் காரணமாக புற்றுநோய் ஏற்படும் என்ற காரணத்தை சில மருத்துவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட டிமோதி வாங், டானியல் ஆகியோர் தெரிவித்தனர்.

இந்த ஆராய்ச்சியானது மன அழுத்தம் மற்றும் கணைய புற்றுநோய் இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பை அறியும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக, கணையத்தில் வளர்சிதை மாற்றங்கள் கொண்ட எலிகள் ஆராய்ச்சிக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன. இதன்பின், அவை சிறிய அறையில் வளர்தல் உள்ளிட்டவை காரணமாக மன அழுத்தம் ஏற்படும் நிலைமைக்கு செயற்கையாக தள்ளப்பட்டன். அதன்பின்பு, சுமார் 14 வாரங்கள் கழித்து, மன அழுத்தம் கொண்டிருந்த அந்த எலிகளை ஆய்வு செய்தபோது, அவற்றில் 38 சதவீத எலிகளுக்கு கணைய புற்றுநோய் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

×Close
×Close