இந்த குளிர்காலத்தில் பொடுகு வராமல் தடுக்க பயனுள்ள குறிப்புகள்!

வறட்சியைத் தவிர்க்க உங்கள் முகத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க முடியும் என்றாலும், உங்கள் உச்சந்தலையில் எண்ணெய் தடவுவது பொடுகு சிகிச்சைக்கு தீர்வாகாது என்று டாக்டர் கிரண் சேத்தி கூறினார்.

Winter Hair care TIps
Keep your hair without dandruff in this winter with these effective tips

இது குளிர் காலம் என்பதால், உங்கள் தோல் மற்றும் முடி பராமரிப்பு வழக்கத்துக்கு’ சில பருவகால புதுப்பிப்பு (Seasonal updates) தேவைப்படும். ஏனென்றால், குளிர்காலத்தில் உங்கள் முகத்திலும் உச்சந்தலையிலும் சருமம் வறண்டு போகும், இதன் விளைவாக உங்கள் உச்சந்தலையில் பொடுகு மற்றும் உங்கள் முகத்தில் குறிப்பாக மூக்கைச் சுற்றி தோல் உதிர்கிறது.

வறட்சியைத் தவிர்க்க உங்கள் முகத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க முடியும் என்றாலும், உங்கள் உச்சந்தலையில் எண்ணெய் தடவுவது பொடுகு சிகிச்சைக்கு தீர்வாகாது என்று அழகியல், தோல் மற்றும் ஆரோக்கிய நிபுணர் டாக்டர் கிரண் சேத்தி கூறினார்.

டாக்டர் சேத்தி தனது  இன்ஸ்டாகிராம் பதிவில் பொடுகு பற்றிப் பேசினார், “குளிர்காலத்தில் உச்சந்தலையில் பொடுகுத் தொல்லை அதிகரிக்கும். அத்துடன் முகத்தின் மத்தியில் நெற்றி, மூக்கு, உதடு, நாடி (T-zone) பகுதிகளில் சருமம் வறண்டு உதிரக்கூடும். ஏனென்றால், குளிர்காலத்தில் உங்கள் உச்சந்தலையானது காற்றில் உள்ள வறட்சியை ஈடுசெய்ய அதிக எண்ணெயை உருவாக்குகிறது, மேலும் பொடுகை உண்டாக்கும் ஈஸ்ட் அந்த எண்ணெயை விரும்புகிறது.

அந்த வீடியோவில், குளிர்காலத்தில் பொடுகு அதிகரிப்பதற்கான காரணத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார். “என்ன நடக்கிறது என்றால், கோடையில், வானிலை ஈரப்பதமாக இருப்பதால் உங்கள் சருமத்திற்கு அதிக எண்ணெய் தேவையில்லை. ஆனால் குளிர்காலத்தில், உங்கள் முடி மற்றும் தோல் வறட்சியை ஈடுசெய்ய அவை அதிக எண்ணெயை உற்பத்தி செய்கின்றன. பொடுகை உண்டாக்கும் ஈஸ்ட் இன்னும் அதிகமாக உற்பத்தி செய்யத் தொடங்குகிறது. இது உங்கள் உச்சந்தலையில் மற்றும் உங்கள் தலைமுடியில் உள்ள அனைத்து எண்ணெயையும் விரும்புகிறது, எனவே பொடுகு உருவாகிறது. அதனால்தான் எண்ணெய் தடவுவது பொடுகுத் தொல்லையை மோசமாக்குகிறது, ”என்று அவர் விளக்கினார்.

ஒருவேளை உங்களுக்கு பொடுகுத் தொல்லை வந்துவிட்டால், அதற்கு சிகிச்சையளிப்பதற்கான தீர்வுகளை அவர் பரிந்துரைத்தார். சாலிசிலிக் அமிலம், ஜிங் பராத்தியான், செலினியம் சல்பைட் அல்லது கெட்டோகனசோல் கொண்ட ஷாம்புவை’ வாரத்திற்கு மூன்று முறை தலையை கழுவுவதற்கு முன், 5-10 நிமிடங்களுக்கு நன்றாக முடியில் தேய்த்து பின்னர் அலசவும்.

பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட்டவுடன் உங்கள் உச்சந்தலையையும் முடியையும் எவ்வாறு பராமரிப்பது?

மீண்டும் பொடுகு வராமல் இருக்க, அந்த ஷாம்பூவைக் கொண்டு வாரத்திற்கு 1-2 முறை உங்கள் தலைமுடியை கழுவுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Keep your hair without dandruff in this winter with these effective tips

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express